Connect with us

Cricket

ஜெயம் பெறுவாரா ஜெயசூர்யா?…இழந்த பெருமையை மீட்டெடுக்குமா இலங்கை அணி…

Published

on

Jayasurya

இருபது ஓவர் உலகக் கோப்பை நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஓரு நாள் போட்டி தொடர்களில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த இரு அணிகளுக்கிடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி நேற்று இரவு பல்லிகலேவில் வைத்து நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இருபது ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து இரு நூற்றி பதிமூன்று ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி பத்தொன்பது புள்ளி இரண்டு ஓவர்களில் நூற்றி எழுபது ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. சர்வதேச அரங்கில் தனது கிரிக்கெட் ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் அதிகமாக தள்ளாடியது. ஜாம்பவான் அணிகள் இலங்கை அணியுடனான போட்டிகளை பயிற்சி ஆட்டங்களைப்போல பாவித்து அந்த அணியை அடித்து தும்சம் செய்திருந்தனர்.

அர்ஜுன ரனதுங்கா தலைமையில் விஸ்வரூபம் எடுத்து எதிரணியை மிரட்டும் திறமைபடைத்தவர்களாக மாறினர் இலங்கை வீரர்கள். இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றை அப்படியே புரட்டி போட்டது. அரவிந்த டி சில்வா, மர்வான் அட்டப்பட்டு, முத்தையா முரளிதரன். ரோஷன் மகனாம, சமிந்தா வாஸ், மகிலா ஜெயவர்தனே, குமார் சங்ககாரா என எதிரணி வீரர்களை அதிர வைக்கும் திறமைசாளிகள் அணிவகுக்கத் துவங்கினர்.

Mendis

Mendis

ரமேஷ் கலிவிதரனாவுடன் துவக்க வீரராக களம் இறங்கிய சனத் ஜெயசூர்யா அலறவிட்டார் எதிரணி பந்து வீச்சாளர்களை. தற்போது உள்ள இலங்கை அணிக்கு வெற்றி என்பது கானல் நீராகவே மாறிவிட்டது. அணியின் ஆலோசகராக இருந்து வந்த  ஜெயசூர்யா இலங்கை அணிக்கு தலைமை பயிற்யாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இந்தியாவுடனான போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும் துவக்க ஆட்டக்காரகள் ஆடிய விதம் இந்திய ரசிகர்களை கலங்கடிக்கச் செய்தது.

அணியினருக்கு பயிற்சி வழங்கி வரும் ஜெயசூர்யாவின் அதிரடி மற்றும் நேர்த்தியை களத்தில் காட்டினர் ஸ்ரீலங்க அணியினர். அர்ஸ்தீப் சிங் முதல் விக்கெட்டாக குசால் மெண்டிஸை வீழ்த்தினார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி என்பத்தி நான்கு ரன்களை குவித்தது. மென்டீஸ் நாறபத்தி ஐந்து ரன்களும், பதுன் நிஷங்கா  எழுபத்தி ஒன்பது ரன்களையும் குவித்தார்கள். இலங்கை அணியின் துவக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்த பொழுது ஜெயசூர்யாவின் வருகையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

google news