automobile
டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய 5 சூப்பர் பைக்குகள்..!
160cc இல் தொடங்கி 250cc வரையில் இருக்கும் டூயல்-சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் பைக்குகளை பற்றி காணலாம்.
160cc-முதல் 250cc வரை உள்ள பைக்குகள் அதிக செயல் திறனை வெளிபடுத்தும். அதிக வேகத்தை கட்டுப்படுத்த வாகனங்களில் சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் அவசியம் தேவை. வாகனங்களின் வரும் ஏபிஎஸ் பிரேக்குகள் வாகனம் இயங்கும் போது எவ்வித இடையூறும் இன்றி சீராக நிறுத்துகிறது. இது ஈரமான நிலப்பரப்பிலும் மற்றும் உலர்ந்த நிலப்பரப்பிலும் வாகனங்கள் அல்லது அதிவேகத்தில் பயணித்தாலும் எவ்வித இடையூறும் இன்றி நிறுத்தி கொள்ளலாம்.
நாம் அதிவேகத்தில் செல்லும்போது திடீரென்று பிரேக்கை அழுத்தும் போது சக்கரங்கள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்க நேரிடும். வாகனங்களில் ஏபிஎஸ் பொருத்தி இருந்தால் அந்த கவலை வேண்டாம். சக்கரங்களை சருக்கவிடாமல் வாகனங்களை நிறுத்தும். இரண்டு சக்கரத்திலும் ஏபிஎஸ் உடன் வரும் போது சக்கரங்களில் லாக் தவிர்க்கப்படுகிறது. இது பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இதில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய 5 சிறந்த டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட பைக்குகளை காணலாம்.
பஜாஜ் பல்சர் N160 :
இந்த பட்டியலில் மிகவும் குறைந்த விலையில் இந்தவாகனம் கிடைக்கிறது. உலகின் அதிவேக இந்தியர் என பெயர் கொண்ட பஜாஜ் நிறுவனம் இந்த வண்டியை வடிவமைத்துள்ளது. இந்த 160 சிசி இன்ஜினில் 17. 03 php பவரையும் 14.6 எண்ணம் என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் மைலேஜ் சுமார் 45 கிலோமீட்டர் வரை கொடுக்கிறது. இது 120 கிலோமீட்டர் என்ற அதி வேகத்தை தொடுகிறது. இதனை கட்டுப்படுத்த டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு வருகிறது.
பஜாஜ் பல்சர் NS160 :
160 சிசி என்ஜின் கொண்டு கொண்டுள்ளது. இது 16ps பவரையும் 14.5 nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது சுமார் 55 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது. மேலும் இது 1.31 லட்சத்தில் கிடைக்கப்பெறுகிறது. டூயல் சேனலில் ஏபிஎஸ் வசதி உடன் வருகிறது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 4v :
இந்தப் பட்டியல் பஜாஜ் இல்லாத ஒரே ஒரு வண்டி இதுதான். இதில் நவீன தொழில்நுட்பத்துடன் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. மூன்று டிரைவிங் மோடுகள்,முழுமையான டிஜிட்டல் அமைப்பு இதில் ப்ளூடூத் இணைப்புடன் வருகிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 200 சிசி எஞ்சின் 20. 82 பிஎஸ் பவரையும் 17.25 டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனைக் கட்டுப்படுத்த டூயல் சேனல் abs கொண்டு வருகிறது. இதன் விலை சுமார் 1.47 லட்சத்திலிருந்து கிடைக்கிறது.
பஜாஜ் பல்சர் ns200 :
200 சிசி பொருந்திய இன்ஜினில் 24. 5 பிஎஸ் பவரையும் 18.7 என்எம் டார்க்கியும் வெளிப்படுத்துகிறது. இது 35 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது இதன் விலை சுமார் 1.50 இலட்சத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கப்பெறுகிறது. பட்டியலில் அதிக சக்தியை வெளிப்படுத்தும் ஒரே பைக்காக விளங்குகிறது. இதில் லிக்விட் கூலிங் முறையில் குளிர்விக்கப்படுகிறது.
பஜாஜ் பல்சர் n250 :
இதில் 250 சிசி இன்ஜினை கொண்டு வருகிறது. இதில் 24.5 பி எஸ் பவரையும் 21.5nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 35 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது. இதில் கருப்பு நிறத்தில் மட்டுமே டூயல் சேனல் வருகிறது பிற வண்ணங்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் வருகிறது. இந்த வண்டிக்கு இது ஒரு குறையாக காணப்படுகிறது. இது சுமார் 1.54 லட்சத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது