Connect with us

automobile

வந்தாச்சு ஹோண்டாவின் புதிய Elevate..suv மார்க்கெட்டில் பட்டைய கிளப்புமா ?

Published

on

honda elevate

ஹோண்டா கார்ஸ் இந்தியா மார்க்கெட்டில் தனக்கென தனி ஒரு பதிப்பை பதித்து அதன் நீடித்து உழைக்கும் என்ஜின் மற்றும் உறுதியான கட்டமைப்பு மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது. செடான் மாடல் கார்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலத்தில் ஹோண்டா தற்பொழுது ”ஹோண்டா சிட்டி” மற்றும் ”அமேஸ்” கார்கள் சந்தை விற்பனையில் ஜொலிக்கிறது. மற்ற நிறுவனங்களின் செடான் கார்களை விற்பனையில் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளது. இது honda இந்தியா மார்க்கெட்டின் வீழ்ச்சியை தடுக்கிறது.

இந்திய மக்களிடையே தற்பொழுது ட்ரண்ட் ஆகி வருது எஸ்.யூ.வி ரக காரர்களே. மற்ற நிறுவனங்கள் எல்லாம் எஸ்.யு.வி ரக கார்களை போட்டி போட்டுக் கொண்டு சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில் ஹோண்டா மட்டும் நீண்ட நாட்களாக எஸ்.யு.வி செக்மெண்டில் தனது பதிப்பை பதிக்க தடுமாறி வந்த நிலையில் தற்போது இந்த செக்மெண்டில் கலம் இரங்க தயாராக உள்ளது. ”எலிவேட்” என்ற மிட்- சைஸ் எஸ்.யு.வி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

honda elevate

honda elevate

வடிவமைப்பு:

”எலிவேட்” கார் ஹோண்டா சிட்டியின் 5 ஜென் பிளாட்பார்மை பகிர்ந்து கொள்கிறது. மொத்தத்தில் பெரிய எல்.இ.டி முகப்பு விளக்கு, பெரிய கிரில் அமைப்பு,பெரிய டயர்ஸ்,அருமையான குரோம் ஃபினிஷ்,4.3 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட தரமான எஸ்.யு.வி காராக வெளிப்புற வடிவமைப்பு அமைந்துள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களாக உட்புற கட்டமைப்பில் ஹோண்டா சிட்டியின் லே-அவுட் உடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

honda elevate

honda elevate

10 இன்ச் தொடுதிரை, டிஜிட்டல்வடிவிலான ஸ்பீடோமீட்டர்,பெரிய சன்ருப்,வயர்லெஸ் சார்ஜிங் வசதி,வென்டிலேட்டட் சீட்ஸ்(குளுகுளு சீட்) ,ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்,360 டிகிரி கேமரா 6 ஏர்பேக்,சீட் அட்ஜஸ்ட்மென்ட் வித் மெமரி பங்க்ஷன் போன்ற பலவித நவீன தொழில்நுட்பத்தை ஹோண்டா வழங்குகிறது. மேலும் இதை தனித்து காட்டும் விதமாக வேறு எந்த மிட் சைஸ் காரர்களிலும் இல்லாத அளவிற்கு ”ஹோண்டா சென்ஸ்” என்னும் டெக்னாலஜி அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் மற்ற கார்களைவிட தனித்து காணப்படும். ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங்,லேன் கீப் அசிஸ்டன்ஸ் போன்ற அதி நவீன தொழில்நுட்பமும் இதன் உயரிய மாடலில் கிடைக்கப்பெறும்.

இன்ஜின்:

இன்ஜின் வகைகளில் 1.5 லிட்டர் 4சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 121 bhp பவரையும் 145nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் சி.வி.டி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இந்த வண்டியின் பயணத்தை மேலும் மிருதுவாகும். மேலும் ஹைபிரிட் இன்ஜின் வகைகளிலும் கிடைக்கப் பெற போகிறது. இதன் மைலேஜ் சுமார் 28 கிலோமீட்டர் வரை இருக்கும் என கம்பெனி தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது மிட் சைஸ் எஸ்.யு.வி ரக கார்களில் மற்ற கார்களை விட அதிக உறுதிதன்மையும் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட காராக உள்ளது.

honda elevate

honda elevate

விலை:

எப்பொழுதும் ஹோண்டா அதன் நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட இன்ஜின்மற்றும் அதன் கட்டமைப்பில் ஒரு குறையும் வைத்ததில்லை. வருகிற ஜூன் 6ஆம் தேதி இதை வெளிநாட்டு சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் செப்டம்பர் 23ஆம் தேதி 2023 அன்று வாடிக்கையாளர்கள் இந்த காரை பெற்றுக் கொள்ளலாம் என்று ஹோண்டா தரப்பு தெரிவிக்கின்றது. இதன் ஆரம்ப விலை 10 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் இதில் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன் 15 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் நீடித்து உடைக்கும் எஞ்சின்,பைவ் ஸ்டார் சேஃப்டி,அதிக மைலேஜ் என அனைத்து காலங்களும் நிரப்புகிறது. மிட் சைஸ் எஸ்.யு.வி செக்மண்டில் இதன் சிறப்பம்சங்கள் பட்டையை கிளப்புகிறது. ஏற்கனவே ஆறு கார்கள் இதன் போட்டியாளர்களாக இருக்கும் நிலையில் ஹோண்டாவின் ”எலிவேட்” மற்ற நிறுவனங்களின் கார்களின் விற்பனையை பாதிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *