automobile
ஹோண்டாவின் சொகுசு குதிரை யூனிகான் 160 அறிமுகம்..!bs6 பேஸ் 2வில் என்ன புதுசா எதிர்பார்க்கலாம்..?
இருசக்கர வாகன விற்பனையில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஹோண்டா அதன் மிருதுவான மற்றும் நீடித்து உடைக்கும் எஞ்சின்-காக மக்களிடையே பிரபலமானது. கடந்த 2004 ஆம் ஆண்டு 150சிசி பிரிவில் யூனிகான் வெளிவந்தது. அன்று தொடங்கி இன்று வரை விற்பனையில் சாதனை புரிந்தது வருகிறது. சுமார் இருபது வருடமாக இதன் பயன் மக்களுக்கு சென்றடைந்து நல்ல விற்பனையில் உள்ளது. மக்களின் பயணத்தை மிருதுவாகவும் சொகுசாகவும் வைக்கக் கூடியதாக இந்த வாகனம் உள்ளது.
யூனிகான் தற்போது பிஎஸ் 6 கொள்கையின்படி 160 சிசி யாக உயர்த்தப்பட்ட பின்பும் இதன் விற்பனை சந்தையில் சூடு பிடிக்கிறது. தற்பொழுது இதன் bs6 பேஸ்-2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1,09,800 ரூபாய் விலையில் வந்துள்ளது. முன்பை விட 4,100 ரூபாய் கூடுதலாக உள்ளது. ஆனால் இந்த வண்டியின் வடிவமைப்பில் அன்று முதல் இன்று வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே கிராபிக்ஸ் கொண்டு வருகிறது. கவர்ச்சியாக வேறு எந்த கிராபிக்ஸும் இடம்பெறவில்லை. இதன் வாடிக்கையாளருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அதே 3 வண்ணங்களில் கிடைக்கப்பெறுகிறது. பேர்ல் இக்னீசியஸ் பிளாக் , இம்பரல் ரெட் மெட்டாலிக் , மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக்.
இன்ஜின் :
இந்த வண்டி 162 சிசி இன்ஜின் உடன் வருகிறது. தற்போது பிஎஸ்-6 பேஸ்-2 கோட்பாடுகளுடன் வருகிறது. இது 12 ps பவரையும் 14 nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இதனை கட்டுப்படுத்த 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. இதை தவிர வேறு எதுவும் புதுசாக மாற்றம் செய்யப்படவில்லை ஹோண்டா. நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த எந்த அப்டேட்டும் கொடுக்காமல் யூனிகான் வெளியிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஹோண்டா இப்பொழுது 3 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மேலும் 7 வருட நீடிக்கப்பட்ட உத்திரவாதம் யூனிகானுக்கு வழங்கப்படுகிறது. இந்த 10 வருட உத்திரவாதம் ஹோண்டாவின் டியோ வண்டிக்கும் பொருந்தும்.
ஹோண்டா யூனிகான் தரை மட்டத்திலிருந்து அதன் உயரம் 187 mm ஆக உள்ளது. இதன் மொத்த எடை 140 கிலோகிராமாக உள்ளது. மேலும் 798 mm நீளம் கொண்ட நீண்ட இருக்கை வருகிறது. மேலும் முன்பக்க சக்கரங்களில் 240 mm டிஸ்க் பிரேக்கை கொண்டு வருகிறது. 13 லிட்டர் மொத்த எரிபொருள் நிரப்பும் தொட்டியுடன் வருகிறது. இந்த முறையும் பின்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்காமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்சன் உடனும் பின்பக்க ஒற்றை சஸ்பென்சன் உடனும் வருகிறது.