Connect with us

automobile

ஹோண்டாவின் மூன்று புதிய கார்கள் அறிமுகம்..! இந்திய சந்தையில் மற்ற கார்களை ஓரங்கட்டுமா..?

Published

on

honda cars

இந்தியாவில் ஹோண்டாவிற்க்கு சிட்டி மற்றும் அமேஸ் கார்களை தவிர வேறு எதுவும் நல்ல விற்பனையை கொடுக்கவில்லை. ஹோண்டாவின் வாகனங்கள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. ஹோண்டாவின் சிட்டி வகை மாடல் இன்றளவும் செட்டான் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை பெற்று மற்ற கார்களுக்கு கடும் போட்டியை அழிக்கிறது. இந்நிலையில் ஹோண்டா மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அவைகளில் தற்போது ஹோண்டா விடம் ஒரு குறையாக காணப்படுவது ஒரு மிட் சைஸ் எஸ்யூவி இல்லாததுதான்.

அதை போக்கும் வகையில் ஹோண்டா எலிவேட் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்கின்றனர். அந்த வகையில் எலிவேட் காரும் மின்சார காராக விரைவில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நான்கு மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உள்ள செடான் பிரிவுகளில் நல்ல விற்பனையில் உள்ள அமேஸ் மேம்படுத்தப்பட்ட வகைகளுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹோண்டா எலிவேட் :

சமீபத்தில் ஹோண்டாவின் புதிய எஸ்யூவியான எலிவேட் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஹூண்டாய் க்ரெட்டா,கியா செல்டோஸ்,மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா,டொடோடா அர்பன் குரூஸர் மற்றும் டாடா ஹரியர் போன்ற காரளுக்கு போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனம் ஹோண்டாவின் w-rv மற்றும் c-rv வாகனங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

honda elevate

honda elevate

ஹோண்டா சிட்டியில் உள்ள அதே 1.5 4சிலிண்டர் வி-டெக் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து 121 பி எஸ் பவரையும் 145 nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும் ஆறு ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இது இந்தியாவில் ஆரம்ப விலையாக 11 லட்சம் எக்ஸ்ஷோரும் வரும் விலையில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா எலிவேட் ஈவி :

honda elevate 2

honda elevate 2

எலிவேட்டிங் ஈவி மாடல் 2026 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஹோண்டாவின் ஹைபிரிட் டெக்னாலஜி பயன்படுத்தாமல் வருவது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. இது சந்தைக்கு வரஉள்ள மின்சார கார்களான ஹூண்டாய் க்ரெட்டா ஈவி மற்றும் கியா செல்டோஸ் ஈவி மற்றும் டாடா கர்வ் ஈவி போன்ற மின்சார கார்களுக்கு நேரடி போட்டியாளராக வருகிறது. இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோ மீட்டர் வரை செல்லும் என நிறுவனத்திடம் தெரிவிக்கப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் :

மூன்றாம் தலைமுறைக்கான ஹோண்டா அமேஸ் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாக உள்ளது. உருவ அமைப்பிலும் புதிய மாறுபாடு உடனும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடனும் கூடிய சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முழு வடிவமைப்பு விற்பனையில் உள்ள ஹோண்டா அக்காட் மற்றும் சிட்டி கார் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு இதனை மறு உருவாக்கம் செய்யப்பட்டு வரவுள்ளது.

honda amaze

honda amaze

மேலும் இதில் அதே பழைய 1.2 வி-டெக் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் adas தொழில்நுட்பத்துடன் வருவது கூடுதல் சிறப்பம்சமாகும். மேலும் மற்ற சிறப்பம்சங்கள் அமேஸ் வெளியிடும் நாள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *