Connect with us

automobile

10 நிமிடம் சார்ஜ் செய்தால்1000 கிலோமீட்டர் ஓடும்..! அசத்தும் டோயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் கார்..!

Published

on

toyota ev car

மாறிவரும் எலக்ட்ரிக் வாகனங்களின் சூழ்நிலைக்கேற்ப டொயோட்டா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களின் மீது கவனம் செலுத்தி வருகிறது. டொயோட்டா நிறுவனம் தற்பொழுது திட- நிலை பேட்டரிகளில் புதிய தொழில்நுட்பத்தை கையாண்டு அதில் செயல்திறன் மற்றும் பயண தூரத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் இதன் மூலம் குறைந்த விலையில் அதிக தூரம் பயணிக்கும் காரை உருவாக்கும் பணியில் உள்ளது டொயோட்டா. தற்பொழுது எலக்ட்ரிக் மார்க்கெட்டை முழுவதுமாக கையில் வைத்திருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விட அதிக தொலைவு செல்ல கூடிய தரமான வண்டிகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் உள்ளது டொயோட்டா.

toyota ev car

toyota ev car

இந்த ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனம் தற்பொழுது அடுத்த தலைமுறை லித்தியம் -அயன் பேட்டரியை புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்து வெளியிடுவதற்கான முயற்சியில் உள்ளது. 2026 ஆம் ஆண்டு இந்த பேட்டரி விற்பனைக்கு வர உள்ளதாகவும் இதை பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் அதிகம் தூரம் பயணிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு முறை சாட்சி செய்தால் சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோ மீட்டர் என்னும் இலக்கை அடைய முடியும்.

 

இதுவரை குறைந்த நிமிடத்தில் சார்ஜ் செய்து நீண்ட தூரம் பயணிக்கும் டெஸ்லாவின் yகாரை விட அதிக மைலேஜ் மற்றும் குறைந்த நிமிடம் சார்ஜிங் செய்து வசதியும் பெரும் நிறுவனமாக டொயோட்டா விளங்கும். உலகத்தின் சிறந்த எலக்ட்ரிக் காரான டெஸ்லா 530 கிலோ மீட்டர் செல்லக்கூடியது. மேலும் டொயோட்டா தரப்பில் இருந்து தெரிவிப்பது என்னவென்றால் பேட்டரி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் இதனை அதிக அளவில் உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு 2027 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

toyota ev car

toyota ev car

மக்கள் மின்சாரக்காரர்களுக்கு மாறும் பொழுது அதன் பயண தூரத்தை மிகவும் கவனிக்கிறார்கள். இதனால் சாலிட்-ஸ்டேட் பேட்டரி கொண்டு தற்போது திரவ எலக்ரோலைட் பேட்டரி விட அதிக அளவில் மைலேஜ் தரக்கூடியதாக விளங்கும். வழக்கமாக இந்த பேட்டரி அதிக விலையில் விற்கக் கூடியது ஆனால் டொயோட்டா நிறுவனம் இதை குறைந்த விலைக்கு விற்க புதிய தொழில்நுட்பத்துடன் முயற்சித்து வருகிறது. தற்போதுஅதிகம் உபயோகிக்கும் லித்தியம் அயான் பாஸ்போர்ட் பேட்டரி சைனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

டொயோட்டா இந்த கார்களை ஓஇஎம்(OEM) தொழில்நுட்பத்துடன் தயாரிக்க உள்ளது. வழக்கமான கார்கள் கன்வேயர் பெல்ட் மூலம் தனித்தனியாக உதிரி பாகங்கள் இனைக்கப்பட்டு முழுமை பெறும். ஆனால் இந்த முறை செயல்முறை தானாகவே அனைத்து வேலையும் செய்து முழுமையான காரை தயார் செய்யும்.

 

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *