automobile
வருகிறது KTM-ன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இதன் விலை மற்றும் ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா..?
ஆஸ்திரேலியா நாட்டின் நிறுவனமான கேடிஎம் தனது பைக்களை இந்தியாவில் உள்ள பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டணியுடன் வைத்து அதன் வாகனங்களை விற்று வருகின்றது. இந்த நிறுவனம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை மட்டும் விற்று வந்தது தற்பொழுது மாறிவரும் மின்சார வாகனங்களின் சூழ்நிலைக்கேற்ப நிறுவனமும் அதன் மீது திருப்பி உள்ளது. வழக்கமாக அதிக வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை மட்டும் தயாரித்த கேடிஎம் நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பக்கம் திரும்பி உள்ளது.
தற்போது கேடிஎம் எலக்ட்ரிக் மோட்டாரை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஐரோப்ப நாடுகளில் இந்த வாகனம் தற்பொழுது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வண்டியின் உருவமைப்பு இந்தியாவிற்கு ஏற்றது போல் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் பஜாஜ் கூட்டணி உடன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த வாகனம் 2025 ஆம் ஆண்டின் தொடக்க காலங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேடிஎம் பைக்குகளை போல இதுவும் ஸ்போர்ட்டி வடிவில் சோதனை செய்யும் பொழுது காணப்படுகிறது. இன்னும் முழுமையான வடிவம் பெறப்படாத நிலையில் இதன் பேட்டரியானது இரு கால்களின் இடையில் பொருத்தி சோதனை செய்து வருகிறது. மேலும் இந்த இரு சக்கர வாகனம் முன்புறத்தில் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் முன்பக்க மற்றும் பின்பக்க சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள், அலாய்யுடன் பொருந்திய சக்கரங்கள்,அலுமினிய இருக்கைப்பிடிகள் போன்றவைகளை காண முடிகிறது.
இருவர் தாராளமாக அமர்ந்து செல்லும் அளவிற்கு நீளமான இருக்கையை கொண்டுள்ளது. இதன் உதிரிபாகங்கள் பஜாஜ் சட்டக் மின்சார ஸ்கூட்டரோடு பகிர்ந்து கொள்ளும் என தெரிகிறது. கேடிஎம் இன் சோதனை மின்சார வாகனங்கள் இரண்டு வகையில் கிடைக்கப்பெறும் இதில் 8kwh வாட் பேட்டரி கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்தியா விலுள்ள பஜாஜ் உடன் கூட்டி சேர்ந்து உருவாக்கப்பட்டது.
இதன் உச்ச வேகமாக 100 கிலோமீட்டர் வரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொன்று 4kwh வாட் பேட்டரி கொண்ட மோட்டார் இது 45 கிலோமீட்டர் வரை அதன் உச்ச வேகமாக இருக்கும். மேலும் இதைப் பற்றிய முழுமையான விவரங்கள் நிறுவனம் தரப்பிலிருந்து சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.