automobile
மகேந்திராவின் புதிய எஸ்யூவி மின்சார கார் பிஇ 0.5 அறிமுகம்..! இதன் விலை மற்றும் ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா..?
உள்நாட்டு உற்பத்தி நிறுவனமான மகேந்திரா மக்களுக்கு தரமான எஸ்யுவி கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து எஸ்யூவி ரக காரைகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது மாறிவரும் மின்சார வாகன சூழ்நிலைக்கேற்ப மகேந்திர நிறுவனம் தனது புதிய எஸ்யுவி ரக எலக்ட்ரிக் காரான பிஇ. 0.5(BE0.5)அறிமுகம் செய்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவர உள்ளதாக நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் புகைப்படங்களை மகேந்திரா தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மூன்று ஸ்போக் ஸ்டேரிங் கொண்டு முழுவதும் டிஜிட்டல் வடிவிலான கண்சோல் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆக தோற்றமளிக்கிறது. இதன் ரேஞ்ச் சுமார் 450 கிலோமீட்டர் வரை செல்லகூடியதாக உள்ளது. இதனால் விலையின் அடிப்படையில் இந்த எலக்ட்ரிக் கார் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இது மகேந்திராவின் முதல் எஸ்யுவி ரக ”பான் எலக்ட்ரிக்” காராக வெளிவர உள்ளது.
இங்குளோ(INGLO)-எனும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு மகேந்திராவின் இந்த எலக்ட்ரிக் கார் எதிர்காலத்திற்க்கு ஏற்ப வடிவமைப்பு செய்யப்படுகிறது. இந்த கார் முழுவதும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வரும் என நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. செயல்திறன் மக்களை ஈர்க்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
வடிவமைப்பு :
முன்பக்க நீளமான பானட்டுகளை கொண்டுள்ளது. C வடிவிலான டி ஆர் எல் மற்றும் நேர்த்தியான முன்புற எல்.இ.டி விளக்குகளை கொண்டுள்ளது. இதன் நான்கு சக்கரமும் அலாய் வடிவ சக்கரங்களை கொண்டுள்ளது. இதன் தோற்றதின் தரத்தை கூட்டுகிறது. மேலும் பின்புற எல் இ டி விளக்குகளையும் கொண்டுள்ளது. இது 4370 mm நீளத்தையும் 1900 mm அகலத்தையும் கொண்டு வருகிறது. இதன் சக்கரத்தின் அகலங்கள் 2775mm மாக உள்ளது.
450 கிலோமீட்டர் மைலேஜ் :
இந்த அதிநவீன மகேந்திராவின் பிஇ 0.5 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 60 முதல் 80 கிலோ வாட்(KWH) பேட்டரி பேக் உடன் வருகிறது. இதனால் சுமார் 435 லிருந்து 450 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும். RWD மற்றும் all-WD ஓட்டக்கூடிய வகையிலும் கிடைக்கப்பெறுகிறது. மேலும் இதன் உட்பகுதியில் மறைக்கப்பட்ட ஏசி வென்ட்கள் உன்னுடன் வருகிறது. உயரத்தை கூட்டி குறைக்கக்கூடிய வகையில் இருக்கையும் உள்ளது.
வட்ட வடிவிலான ஸ்டேரிங்கை அதன் உயரத்தை மேலும் கீழுமாக சரிசெய்ய வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்களின் வசதிக்காக சுற்றிலும் ஏர்பேக்கள் மற்றும் (ADDS)கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
விலை :
மகேந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி பிஇ 0.5 வரவிருக்கும் அக்டோபர் 2025 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் கிடைக்கப்பெறும் எனவும் இதன் எக்ஸ்சோரும் விலை 25 லட்சம்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.