automobile
மாருதியின் புதிய எங்கேஜ் கார் அறிமுகம்..! 7 சீட்டர் விற்பனையில் ஆதிக்கம் தொடருமா..?
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி தனது புது மாடல் காரான எங்கேஜை ஜூலை 5ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. டொயோட்டா மற்றும் சுசுகி இடையே போட்டுள்ள வாகன பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி டொயோட்டாவின் இனோவா ஹை-கிராஸை குளோனிங் செய்யப்பட்டு சுசுகியின் எங்கேஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. இது ஹைபிரிட் டெக்னாலஜி உடன் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்க கூடியதாக இந்த வாகனம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகியில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் விலை உயர்ந்த காராக உள்ளது. சமீபத்தில் மாருதி சுசுகி தனது இணையதளத்தில் இந்த வாகனத்திற்கான அறிமுக பதிவை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல சொகுசு வசதிகள் கூடிய காராக இது விளங்கும் என சந்தைப்படுத்தியது. இது 7 இருக்கைகள்கொண்ட கார் பிரிவில் மற்ற கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சுசுகி கிரான்ட் விட்டாரா காரை மாற்றி அமைத்து டொயோட்டா ஹைரைடர் காரை இதே ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி மாருதி தரப்பில் தெரிவிப்பது என்னவென்றால் ”நாங்கள் சந்தையில் புது கார் ஒன்றை வெளியிட உள்ளோம். இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரிய பயணத்தை கொடுக்கும் காராக இது இருக்கும் மேலும் இது ஏழு இருக்கைகள் கொண்ட வண்டிகளில் அதிக மைலேஜ் தரும் வண்டியாக இது விளங்கும் என நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர். இது மாருதி சுசுகியின் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கும்” என கூறுகின்றனர்.
என்ஜின் :
இது இரண்டு லிட்டர்(2.0) பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் மோட்டாரில் இயங்குகிறது. இது 172 பிஹெச்பி(bhp)பவரையும் 180nm டார்க் கையும் வெளிப்படுகிறது. இதனுடன் ECVT கியர் பாக்ஸ் இனைக்கப்பட்டு என்ஜின் கட்டுப்படுத்தப்படுகிறது. 206kw பேட்டரி பேக்கை கொண்டு மின்சார காராகவும் இயங்குகிறது. இதன் காரணமாக சிறந்த மைலேஜை பெறமுடியும்.
மேலும் இது தவிர்த்து கம்பெனி தரப்பில் இருந்து காரை பற்றிய வேறு எந்த சிறப்பம்சங்களையும் வெளியிடப்படவில்லை. இருந்த போதிலும் இந்த வண்டியில் 336 டிகிரியில் கேமரா மற்றும் மூன்று விதத்தில் மாற்றக்கூடிய ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி மற்றும் மிகப்பெரிய சன்ரூப் போன்ற வசதிகளுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை :
மாருதி சுசுகி இதுவரை வேறு எந்த காரம் பெற்றிடாத அளவிற்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 முதல் 25 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்க ப்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது