automobile
மிக மிக குறைந்த விலையில் Nokia 5g… 108 எம்பி கேமரா மற்றும் அட்டகாசமான வசதிகள்… விரைவில்..!
நோக்கியா தனது 5ஜி செல்போனை மிக மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்தியாவில் ஒரு காலத்தில் நோக்கியா என்பது அனைவரின் வீட்டில் ஒளிக்கப்பட்ட பெயர். சிறிய வகையிலான கீபேட் செல்போன்களை அறிமுகம் செய்து நம்ப முடியாத அளவிற்கு மிகப் பிரபலமானது. உலகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் நோக்கியா என்கின்ற பட்டன் போன்கள் பிரபலமாக பேசப்பட்டது. ஒரு தகவலை உடனுக்குடன் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் மிக உதவிகரமாக இருந்தது.
இந்த சிறிய செல்போன் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களும் ஈர்க்கப்பட்டார்கள். அதை அடுத்து தொழில்நுட்பம் முன்னேற்றம், ஸ்மார்ட் ஃபோன்களின் வரவு ஆகியவற்றால் நோக்கியாவின் புகழ் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது வரை அந்த புகழை மீட்டு எடுப்பதற்கு nokia போராடி வருகின்றது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கின்றது.
இப்போது இந்தியாவில் மிக மலிவான விலையில் 5ஜி ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றது. இது தொடர்பான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த புதிய சாதனத்தின் சிறப்பம்சம் எப்போது வெளியாகின்றது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நோக்கியா அறிமுகப்படுத்தப் போகும் செல்போனில் பெயர் N76 5G ஆகும்.
இது 4.5 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவை கொண்டது. இது சிறியதாக தோன்றினாலும் இதன் திரையானது 60Hz மற்றும் 720×1080 பிக்சல்கள் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. நோக்கியா N76 5G இன் மையத்தில் MediaTek Dimensity 900 செயலி இருக்கின்றது. இது 5ஜி இணைப்பை ஆதரிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் 5ஜி நெட்வொர்க்கை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.
அது மட்டுமில்லாமல் இந்த சாதனத்தில் கைரேகை சென்சாரும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நோக்கியா N76 5G இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று 6100mAh பேட்டரி ஆகும். மேலும் இந்த பேட்டரி மூலமாக ஒருநாள் முழுவதும் நாம் இந்த செல்போனை பயன்படுத்த முடியும். மேலும் இதை பூர்த்தி செய்யும் வகையில் 55 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய 45 வாட் சார்ஜரை வழங்குவதற்கும் நோக்கியா திட்டமிட்டு இருக்கின்றது.
அதற்கு அடுத்ததாக இந்த செல்போனில் 108 எம்பி ஏ ஐ இயங்கும் சென்சார், 12 எம்பி அல்ட்ரா வெட் லென்ஸ் மற்றும் 5 எம்பி டெலிஃபோட்டோ கேமராவும் இருக்கின்றது. மேலும் செல்ஃபிகளுக்காக 16 எம்பி கேமராவும் இருக்கும் என்று கூறி வருகிறார்கள். அதற்கு அடுத்ததாக நோக்கியா இந்த செல்போனை மூன்று கெபாசிட்டியில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.
அதன்படி பார்த்தால் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு, 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு போன்ற மாடல்களில் இந்த செல்போன்கள் அறிமுகமாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு அடுத்ததாக நாம் பார்க்கப்போவது விலை இவ்வளவு சிறப்பு அம்சம் கொண்ட நோக்கியா N76 5G இன் விலை தான் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றது.
அதாவது இந்த போன் 2999 முதல் 3999 வரையில் விற்பனைக்கு வரலாம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சிறப்பு தள்ளுபடி ஆக 500, 1000 ரூபாயும் வரை விலையை குறைக்கவும் நோக்கியா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த செல்போன் வருகிற டிசம்பர் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.
இந்திய சந்தையில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட் ஃபோன்கள் வெளியாக இருப்பது nokia இழந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் வேகப்படுத்துவதற்காக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நோக்கியா இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் தனது காலடியை பதிப்பதற்கு இந்த செல்போன் உதவி செய்யும் என்று அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.