automobile
ஓலா ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..?
நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் ஓலா எஸ்1 ஏர் சேவையை நிறுத்தியது
ஓலா எலக்ட்ரிக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ”ஓலா எஸ்1 ஏர்” மற்றும் ”ஓலா எஸ்1” எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிவித்தது. இப்போது நிறுவனம் அதன் ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரின் 2kWh பேட்டரி விருப்பத்தை நிறுத்தியுள்ளது. அதாவது இந்த மின்சார ஸ்கூட்டர் இப்போது 3kWh பேட்டரியுடன் மட்டுமே கிடைக்க பெரும் என அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது .
ஓலா எஸ்1 ஏர் இன் 3kWh பேட்டரியின் விலை தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். இந்த ஸ்கூட்டர் முன்பு 84 ஆயிரத்து 999 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்க பெற்றது. இதேபோல், ஓலா எஸ்1 ஆனது 3kWh பேட்டரியுடன் மட்டுமே இனி கிடைக்க பெறும்.
ஓலா எஸ்1 ஏர் இன் சிறிய பேட்டரியை விட ஓலா எலக்ட்ரிக் 3kWh பேட்டரி அதிக தேவையைப் பெறுகிறது என்று தெரிகிறது. நிறுத்தப்பட்ட மாடலை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்கக்கூடிய 3 kWh மாடல் தான் வழங்கப்படும். மறுபுறம், எந்தவொரு வாங்குபவரும் தனது முன்பதிவை ரத்துசெய்தால், அந்த நபருக்கு நிறுவனம் முழு பணத்தைத் திருப்பித் தரப்படும் என நிறுவனம் உறுதியளித்திருக்கிறது.
Ola S1 விலை :
ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, இந்த ஸ்கூட்டரின் 3 கிலோவாட் பேட்டரி மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Ola S1 Pro விலை :
ஓலா S1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 4kWh பேட்டரி மாடல், இந்த ஸ்கூட்டரை வாங்க 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த அனைத்து ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் திருத்தப்பட்ட FAME II மானியமும் அடங்கும்.
போட்டி நிறுவனங்கள் :
Ola Electric இன் மின்சார ஸ்கூட்டர்கள் TVS, Ather Energy, Vida, Okinawa மற்றும் பிற நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுடன் சந்தையில் நேரடியாக போட்டியிடுகின்றன.