Connect with us

automobile

கடகடவென குறைந்த சாம்சங் 5g ஃபோன் விலை… அதுவும் இந்த மாடலுக்கா..? உடனே முந்துங்க…!

Published

on

ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் samsung galaxy ஏ23 5ஜி செல்போனுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இது குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட் ஃபோனுக்கு சிறப்பு விற்பனையில் மிகச்சிறந்த முறையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு இந்த செல்போன் ரூபாய் 15 ஆயிரத்து 399 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிக் கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் மேலும் 5% வரை தள்ளுபடி வழங்குகின்றது. இந்த போனை மிகவும் சிறந்து விலையில் நாம் வாங்க முடியும். புதிய செல்போன் வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ23 5g சிறப்பம்சங்கள்:

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளியாகியுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் 5.

இதில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கின்றது.

மேலும் பெரிய டிஸ்ப்ளே உடன் இந்த போன் இருப்பதால் பயன்படுத்துவதற்கும் மிகச் சிறப்பாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் இந்த செல்போனில் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பி களும் வீடியோ அழைப்புகளும் 18 எம் பி கேமராவுடன் இருப்பதால் கிளியராக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. இதில் 5000mAh பேட்டரி வசதி இருப்பதால் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

மேலும் இந்த செல்போனில் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், Geomagnetic சென்சார், கிரிப் சென்சார், விர்ச்சுவல் லைட்டிங் சென்சார் மற்றும் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற பல வசதிகள் கிடைக்கின்றது.

இந்த செல்போன் லைட் ப்ளூ, ஆரஞ்சு, சில்வர் நிறங்களில் தற்போது விற்பனைக்கு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 197 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

google news