Connect with us

automobile

டெஸ்லா காரை ஒரங்கட்ட வந்தாச்சு மைனஸ் ஜீரோ zPod கார்..! அப்படி இதுல புதுசா என்ன இருக்கு தெரியுமா..?

Published

on

minus z pod

 

பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோவின் மைனஸ் ஜீரோ ”இசட்பாட்” என்ற சுய-ஓட்டுநர் காரை அறிமுகப்படுத்தியது. இது அநேகமாக நாட்டின் முதல் சுயமாக ஓடும் என்ற பெருமைக்குறிய காராகும்.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ, மைனஸ் ஜீரோ இசட்பாட் என்ற சுயமாக ஓட்டும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அநேகமாக நாட்டின் முதல் சுயமாக ஓட்டும் கார் ஆகும். இந்த கார் அனைத்து எதிர்கால மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. இது டூயல் டோன் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

minus z pod

minus z pod

இதன் தொழில்நுட்பம் :

LiDARக்குப் பதிலாக Minus Zero zPod பல கேமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த கார் சுயமாக ஓட்டும் அனுபவத்தை தரும். காரில் 6 கேமராக்கள் உள்ளன. இது 4 இருக்கைகள் கொண்ட கேபின் கார் மற்றும் அதை ஓட்டுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

AI தொழில்நுட்பம் :

நேச்சர் இன்ஸ்பையர்டு ஏஐ (என்ஐஏ) கொண்டு இந்த காரைக் கட்டுப்படுத்துகிறது. இது கேமராக்களில் இருந்து நிகழ்நேரத்தை எடுத்து கொண்டு துல்லியமாக தானாக இயங்குகிறது. நிறுவனம் அதன் விலை, அறிமுகம் பற்றிய எந்த தகவலையும் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. விரைவில் இந்நிறுவனம் மைனஸ் ஜீரோ Zpod உற்பத்தியை தொடங்கும் என்றும், அது மக்களுக்கு சந்தையில் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

minus z pod

minus z pod

டெஸ்லா ஆஃப் இந்தியா :

இதனை டெஸ்லா கார்களுடன் ஒப்பிடுகின்றனர். இது ‘டெஸ்லா ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது. காரில் மல்டி-கேமரா அமைப்பு உள்ளதால் அது சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. தற்போது, ​​நிறுவனம் இந்த காரை ஒரு நிகழ்வில் காட்சிப்படுத்தியுள்ளது. இது கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இரட்டை தொனியில் தயாரிக்கப்பட்டுள்ளது

Minus Zero zPod :

மைனஸ் ஜீரோ zPod ஐ உற்பத்தியில் வைக்கும் எண்ணம் இல்லை என்றும், அது உருவாக்கிய AI-அடிப்படையிலான தானியக்க ஓட்டுநர் தொழில்நுட்பத்தின் காட்சிப் பொருளாகவே தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது.

ஓட்டுநரை மையப்படுத்தாத வாகன வடிவமைப்பிற்கான புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு zPod ஒரு உத்வேகமாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. மைனஸ் ஜீரோவின் கூற்றுப்படி, இந்த வகை வாகன வடிவமைப்பு மனிதர்கள் புதியவித பயணத்தை எதிர்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *