Connect with us

Cricket

3 LBW: கோலியை வறுத்தெடுத்த ஆகாஷ் சோப்ரா

Published

on

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதன் மூலம் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்கவில்லை. மேலும், இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கவில்லை. இந்திய வீரர் விராட் கோலி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தத்தில் 58 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

விராட் கோலியின் மோசமான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்தார். அப்போது, விராட் கோலி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக LBW முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதனை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. லைனை சரியாக கவனிக்காமல், அவர் டிஆர்எஸ் ரிவ்யூவையும் வீணடித்து விட்டார். அவரால் பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை, என்று தெரிவித்தார்.

விராட் கோலியை தொடர்ந்து ஸ்ரேயஸ் அய்யர் பற்றி பேசும் போது, சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து நன்றாக ஆடக்கூடியவர் ஸ்ரேயஸ் அய்யர். நம்முடைய சிறந்த வீரர்கள் ஏன் அப்படி தடுமாறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, என்றார்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் துனித் வெல்லலகே ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

google news