Cricket
திமிரும் இல்ல ஈகோவும் இல்ல! கபில்தேவ் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளம் கிரிக்கெட் வீரர்கள் இப்போது எல்லாம் எந்த ஒரு உதவியும் தேவையில்லை என்பது போல விளையாடுவதாகவும் கோடி கோடியாக அவர்களுக்கு பணம் கிடைப்பதால் அவர்களுக்கு ஈகோவும் திமிரும் வந்துவிட்டது என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் , இதற்கு பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கபில்தேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய ரவீந்திர ஜடேஜா கபில்தேவ் சொல்வது தேவையில்லாத ஒரு கருத்து என்று எனக்கு தோன்றுகிறது . என்னை பொறுத்தவரை நான் சொல்ல வருவது என்னவென்றால் முன்னால் கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்குமே தங்களுடைய மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முழு உரிமை உண்டு.
ஆனால் எதையும் தெரியாமல் சொல்லக்கூடாது, கபில்தேவ் வீரர்களுக்கு ஈகோ திமிரு உள்ளதாக தெரிவித்திருக்கிறார் . நிச்சயமாக அவர் சொல்வது போல இந்திய அணியில் உள்ள வீரர்கள் யாருக்கும் ஈகோ எந்த ஒரு திமிரு கிடையாது. நாங்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையுடன் மூத்த வீரர்கள் அறிவுரையின்படி தான் விளையாடி வருகிறோம் .
எங்களுடைய முழு நோக்கம் இந்திய அணிக்காக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பது தான் அதற்காக நாங்கள் கடினமாக பயிற்சியும் எடுத்து வருகிறோம் . எங்களுடைய மனதில் அது மட்டும் தான் இருக்கிறது என்பதை தவிர ஈகோ என ஒன்றுமே இல்லை. கபில்தேவுக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.