Connect with us

Cricket

டிரெசிங் ரூமில் கம்பீர்-கோலி இப்படித் தான்.. ரகசியம் உடைத்த ஆஷிஷ் நெஹரா

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்கும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் இடையில் உள்ள உறவு குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக வழங்கவில்லை. கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையே களத்தில் பலமுறை பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் அரங்கேறியது. எனினும், இருவரும் தங்களது கிரிக்கெட் வாழ்வில் போட்டியை தவிர வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அந்த வகையில், இருவரிடையே தற்போதைக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றே தெரிகிறது.

கம்பீர் – கோலி விவகாரம் மட்டுமின்றி, வீரர்கள் களத்தில் மோதிக் கொள்வது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஷிஷ் நெஹரா கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, பல வீரர்கள் களத்தில் சண்டையிட்டாலும், போட்டியில் எதிரணியை வீழ்த்த ஒன்றைவார்கள் என்று தெரிவித்தார்.

“விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் அதிக ஆர்வமிக்க வீரர்கள். அவர்கள் எப்போது அணிக்காக விளையாடினாலும், எதிரணியை வீழ்த்த ஒன்றிணைவார்கள். டிரெசிங் ரூம் என்று வந்துவிட்டால், அங்கும் இருவரும் ஒன்றாகவே இருப்பர், அணிக்காக அவர்கள் ஒன்றிணைவார்கள். விராட் கோலியை பொருத்தவரை 16-17 ஆண்டுகள் அனுபவம் மிக்க வீரர், கவுதம் கம்பீரும் இதேபோன்ற அனுபவம் கொண்டவர்.”

“வெளியில் இருந்து பார்க்கும் போது, மக்கள் ஒருவிஷயத்தை யோசிப்பார்கள். ஆனால் கம்பீர் – கோலி மட்டுமின்றி, பல வீரர்கள் இடையே களத்தில் மோதல்கள் இருந்தது உண்டு, ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் அணிக்காக அவர்கள் ஒன்றாக விளையாடுவார்கள். அவர்கள் வீரராகவும், பயிற்சியாளர்-கேப்டன், பயிற்சியாளர் மற்றும் மூத்த வீரர் என பலநிலைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளனர்.”

“கவுதம் கம்பீர் மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டவர். அவர் விஷயங்களை தெளிவாக வைத்துக் கொண்டு, மனதில் இருந்து பேசும் குணம் கொண்டவர். அதுதான் முக்கியமானது. ஒவ்வொருத்தரும் பயிற்சியாளரை அணுகும் விதம் மாறுப்படும். ஆனால், இவர்கள் இருவர் இடையில் நான் எந்த பிரச்சினையும் இருப்பதாக பார்க்கவில்லை,” என்று நெஹரா தெரிவித்தார்.

google news