Cricket
`நம்பிட்டா… நீயே வேணாம்னு சொல்றவரைக்கும் விட மாட்டார்’ – தோனி குறித்து நெகிழ்ந்த அஷ்வின்
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து I Have the Streets – குட்டி ஸ்டோரி என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவில் தோனி குறித்த சுவாரஸ்யமான தகவலை அவர் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், “2008ல நான் யாருனு யாருக்குமே தெரியாது. அந்த டைம்ல என்னோட ஒரே லட்சியம் எப்படியாவது தோனியோட விக்கெட்டை எடுத்துடணும்ங்கிறதுதான். அப்போ, சேலஞ்சர் டிராஃபி மேட்ச் நடக்குது.
நாக்பூர்ல நடந்த மேட்ச்ல தோனி, என்னோட பௌலிங்ல தடுமாறுனாரு. அதுலயும் குறிப்பா ஒரு பால் ஸ்டம்புக்கு ரொம்ப பக்கத்துல போச்சு. அந்த பாலை என்னால இப்பவும் மறக்க முடியாது. அந்த மேட்ச்ல இஷாந்த் ஷர்மா ஓவர்ல தோனி அடிச்ச பந்தை டைவ் அடிச்சு புடிச்சதும், பயங்கர ஆக்ரோஷமா கொண்டாடுனேன். அதுக்கப்புறம் ஃபைனல்ல தோனியோட விக்கெட்டையும் எடுத்தேன்.
உங்ககிட்ட திறமை இருக்குனு தோனி கண்டுக்கிட்டார்னா, நீங்க ரேஸ்ல ஓடத் தயாரான குதிரைனா மட்டும்தான் உங்களை அவர் ரேஸ்ல ஓட வைப்பார். இல்லாட்டி அதை பண்ணவே மாட்டார். ஒரு தடவை உங்க மேல நம்பிக்கை வைச்சுட்டா, `யப்பா சாமி என்னை விட்டுடுப்பா’னு நீங்களே சொல்ற வரைக்கும் அவர் உங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பார்.