Connect with us

Cricket

எம்.எஸ். டோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்த துருவ் ஜூரல்

Published

on

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் இடையிலான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங்கில் அசத்தலாக செயல்பட்டார். இதன் பலனாக எம்எஸ் டோனியின் 20 ஆண்டுகால சாதனையை ஜூரல் சமன் செய்து அசத்தினார்.

இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் இடையிலான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு ஏழு கேட்ச்களை பிடித்தார். இதன் காரணமாக அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி 184 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ஜூரல் பிடித்த ஏழு கேட்ச்கள் துலீப் கோப்பை தொடரின் ஒரு இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் பிடித்த அதிக கேட்ச்கள் என்ற சாதனையை எம்எஸ் டோனியுடன் ஜூரல் பகிர்ந்து கொள்கிறார்.

முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் டோனி 2004/05 ஆண்டுக்கான துலீப் கோப்பை தொடரில் கிழக்கு மற்றும் மத்திய ஜோன்களுக்கு எதிரான போட்டியில் ஏழு கேட்ச்களை பிடித்துள்ளார். தற்போதைய போட்டியில் ஜூரல் ஏழு கேட்ச்களை பிடித்து இருப்பதால், துலீப் கோப்பை தொடரின் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்கள் பட்டியலில் டோனி மற்றும் ஜூரல் இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

முன்னதாக சுனில் பெஞ்சமின் ஒரே இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியது ஒரு வீரர் பிடித்த அதிக கேட்ச்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனை 1973 துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் படைக்கப்பட்டது.

google news