Connect with us

Cricket

பயிற்சியில்லாம வந்துட்டாரு போல.. கோலியை சீண்டிய முன்னாள் பாக். வீரர்

Published

on

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி சோபிக்கவில்லை. முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார். மேலும், மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து பேச வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். கேப்டன் தன் பங்கிற்கு கூறிவிட்ட போதிலும், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் இந்திய தோல்விக்கு அதிருப்தி தெரிவித்தனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய வீரர் விராட் கோலியை கடுமையாக சாடினார்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பசித், “விராட் கோலி போன்ற உலகின் முன்னணி பேட்டர் இரண்டு முறை LBW மூலம் அவுட் ஆகி இருக்கிறார். இதுபோன்ற விஷயங்கள் அய்யர் அல்லது துபே ஆகியோருக்கு நடக்கலாம். ஆனால் விராட் கோலி ஒரு விராட் கோலி. இதன் மூலம் அவர் பயிற்சியில் இல்லை என்றே தெரிகிறது.”

“இந்த பேட்டிங் ஆர்டர் உலக கிரிக்கெட்டை ஆளுவதாக தெரியவில்லை. ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் கேஎல் ராகுல் கூட சரியாக பயிற்சி எடுக்கவில்லை என்றே உணர்கிறேன். இவர்கள் முறையாக பயிற்சி எடுக்காமலேயே வந்துவிடுகிறார்கள்,” என்று தெரிவித்தார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்துக்களின் படி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே விளையாடியது. இந்த போட்டியில் 249 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை.

இந்திய அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் 6 ரன்களுக்கும் அடுத்து வந்த ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் பட்டேல், ஷிவம் துபே போன்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா தன் பங்கிற்கு 20 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். விராட் கோலி மறுபுறம் 18 பந்துகளில் 20 ரன்களையும், ரியான் பராக் 13 பந்துகளில் 15 ரன்களையும் அடித்தனர்.

google news