Connect with us

Cricket

அவரை டோனியோடு ஒப்பிடுவீங்களா? பாக். செய்தியாளரை பொளந்த ஹர்பஜன் சிங்

Published

on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனியை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் செய்தியாளருக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் சூப்பர் லீக், இலங்கை சூப்பர் லீக் 2024, டி20 குளோபல் லீக் போன்ற தொடர்களில் பணியாற்றி இருப்பதாக கூறிக் கொள்பவர் பரித் கான்.

இவர் தனது எக்ஸ் தள பதிவு ஒன்றில், “எம்.எஸ். டோனியா அல்லது முகமது ரிஸ்வானா? யார் சிறந்தவர்? உண்மையை கூறுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங், இப்போலாம், எதை புகைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். எம்.எஸ். டோனி இன்றும் உலக கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரர். ஸ்டம்ப்களின் பின்னால் அவரை விட சிறந்தவர் இப்போதும் யாரும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதுபற்றிய பதிவில், “இப்போ எதை புகைக்கின்றீர்கள்? கேட்பதற்கே முட்டாள்தனமான கேள்வி இது. சகோதரர்களே அவருக்கு சொல்லுங்கள். ரிஸ்வானை விட பலமடங்கு சிறந்தவர் எம்.எஸ். டோனி. ரிஸ்வானை கேட்டால்கூட அவரும், இதற்கு உண்மையாக பதில் அளிப்பார். எனக்கு ரிஸ்வான பிடிக்கும், அவர் நல்ல வீரர். எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடுவார்.”

“ஆனால் இந்த ஒப்பீடு மிகவும் தவறான ஒன்று. சர்வதேச கிரிக்கெட்டில் இன்றும் டோனி நம்பர் 1 வீரர். ஸ்டம்ப்களின் பின்னால் அவரைவிட சிறந்தவர் யாரும் இல்லை,” என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் எம்.எஸ். டோனி 256 கேட்ச்களையும், 38 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடிய 350 போட்டிகளில் 321 கேட்ச்களையும், 123 ஸ்டம்பிங்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் பேட்டிங்கில் எம்.எஸ். டோனி 4876 ரன்களை குவித்துள்ளார். இதில் ஆறு சதங்கள், 33 அரைசதங்கள் அடங்கும்.

முகமது ரிஸ்வான் 30 டெஸ்ட் போட்டிகளில் 78 கேட்ச்களையும், மூன்று முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஸ்வான் 76 கேட்ச்கள் மற்றும் மூன்று ஸ்டம்பிங்களை செய்துள்ளார். டெஸ்ட் பேட்டிங்கை பொருத்தவரை ரிஸ்வான் 1616 ரன்களை சேர்த்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், ஒன்பது அரைசதங்களும் அடங்கும்.

google news

Cricket

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த வாரம் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரு அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய வீர்ர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அழைத்து நிற்க வைத்து, அவர் முன் அவரது பந்துவீச்சை செய்து காட்டிய சம்பவம் அரங்கேறியது.

கான்பூரில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டம் துவங்கும் முன்பே, இந்த சேட்டை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்போது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பும்ராவின் முன் அவரது பந்துவீச்சு ஆக்ஷன் எப்படி இருக்கும் என்பதை செய்து காட்டினர். இதனை துவக்கத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் வாய்விட்டு சிரித்தார்.

களத்தில் போட்டி துவங்கும் முன் இரு வீரர்கள் பும்ராவை கலாய்க்கும் சம்பவத்தை பார்த்து சிரித்த ரியான், ஒருக்கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் தான் அணிந்திருந்த குளோவ் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டார்.

google news
Continue Reading

Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

Published

on

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000-க்கும் அதிக ரன்கள் மற்றும் 200-க்கும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், இதே சாதனையை மற்றொரு வீரர் சமன் செய்யும் நிலையில் உள்ளார்.

இந்த வீரரும் இந்திய அணியில் தற்போது விளையாடி வருபவர் தான். இந்திய அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டர் வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜடேஜாவின் இந்த சாதனையை நெருங்கி வருகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 1943 ரன்களையும், 369 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா தற்போது 299 விக்கெட்டுகள் மற்றும் 3122 ரன்களை அடித்துள்ள நிலையில், அவர் இன்னும் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைக்க முடியும்.

google news
Continue Reading

Cricket

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிதானமாக ஆடியது.

முதல் நாள் உணவு இடைவேளை வரை அந்த அணி 74 ரன்களை மட்டுமே குவித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு உணவு இடைவெளிக்குப் பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், நேற்றைய ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை அடித்திருந்தது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்க இருந்தது. எனினும், தொடர் மழை காரணமாக இன்றைய போட்டி ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் களத்தில் போட்டியை நடத்த முடியாத சூழல் நிலவி வந்துள்ளது.

இதனால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய நாளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மற்றும் இரு அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

google news
Continue Reading

Cricket

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

Published

on

India Bangladesh

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வைத்து இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்தது. ஆல்-ரவுண்டர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பினால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.

துவக்கத்தில் தடுமாறினாலும் நேரம் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாரி இறுதியில் சரண்டரானது பங்களாதேஷ். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்ட நிலையில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தனது பேட்டிங்கை தடுமாற்றத்துடனே துவங்கியது வங்கதேசம்.

Deep

Deep

இருபத்தி ஆறு ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது அந்த அணி, இருபத்தி ஒன்பது மற்றும் என்பது ரன் கள் எடுத்திருந்த நிலையில் முறையே தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. இந்திய அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச் அணி நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டம்  நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நாளைய தினத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

Cricket

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

Published

on

Bravo

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி வீரரகள் தனது பார்முக்கு வந்து அதிரடியை காட்டத் துவங்கினால் எதிரணி வீரர்கள் எல்லாம் கப்-சிப் என மாறிவிடுவார்கள். அபாயகரமான பேட்ஸ்மேன்களையும், அதிரடி பவுலர்களையும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

சில காலங்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்த அணி. ஜாம்பவான் வீரர்கள் பலர் தங்களது ஓய்வை அறிவித்ததாலும், விளையாட்டினை தொடர முடியாமல் போனதாலும் முன் போல தனக்கான தனித்துவத்தை பெற தொடர்ந்து போராடி வருகிறது இந்த அணி.

இந்நிலையில் சர்வதேச போட்டிகள் அனைத்து விதத்திலிருந்தும் 2021ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

Dwayne bravo

Dwayne bravo

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நாற்பது டெஸ்ட் போட்டிகள், நூற்றி அறுபத்தி நாலு ஒரு நாள் போட்டிகள், தொன்னூற்றி ஓரு டி-20 போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தான தனது ஓய்விற்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார்.

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிராவோ. கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வந்த நிலையில் இருபத்தி நான்காம் தேதி நடந்து முடிந்த போட்டியின் போது பிராவோ காயமடைந்திருந்தார்.

இந்த சூழலில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தவர் கண்ணீர் மல்க விடை பெற்றார். நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். கத்து குட்டி அணியாகவே பார்க்கபட்ட அந்த அணி அரை இறுதி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

Trending