இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அட்டகாசமாகவும் அதிரடியாகவும் விளையாடுகிறார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்று கூறலாம். குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்கள் கூட அதிரடியாக விளையாடி அனைவருடைய மனைவியும் கவர்ந்தார் பலரும் அவரை செல்லமாக 360 எனவும் அழைத்து வருகின்றனர்.

இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்பி சிங் சமீபத்திய பேட்டி ஒன்றியது சூர்யகுமார் யாதவ் நம்பர் 4 -வது ஆளாக களமிறங்கினால் அருமையாக விளையாடுவார் என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டால் அவர் 4-வது ஆளாக சுரேஷ் ஐயர் உடன் இணைந்து விளையாட அருமையாக இருப்பார். மற்றபடி 3 -வது ஆளாக இறங்கினால் செட் ஆக மாட்டார். அவருடைய பேட்டிங் அப்படித்தான் இருக்கிறது. எனவே மூன்றாவது ஆளாக அவரை இறக்காமல் 4-வது ஆளாகவே ஒரு நாள் போட்டிகளில் களம் இறக்கினால் அவர் அதிக ரன்களை குவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

டி20 கிரிக்கெட் போட்டியில் போட்டியில் விளையாடும் வடிவம் வேறு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது வேறு இரண்டு வடிவம் வடிவமும் வெவ்வேறுபட்டதாக இருப்பதன் காரணமாக, அதனை புரிந்து விளையாட வேண்டும். என்னை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவுக்கு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அனுபவம் இல்லை என்றாலும் கூட அவர்களுடைய திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என ஆர்பிசிங் கூறியுள்ளார்.