Cricket
2024 டி20 உலகக் கோப்பை: அங்கு நடத்தியதால் ரூ. 167 கோடி இழப்பு?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியதால் 20 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 167 கோடி வரை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலம்போவில் நாளை நடைபெற உள்ள ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. இதை முடித்துக் கொண்டு இறுதியில் தான் இழப்பு தொடர்பான விவகாரம் பற்றிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பெரும்பாலான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நியூ யார்க் நகரில் நடைபெற்றது.
இவைதவிர ஐசிசி வருடாந்திர கூட்டத்தில், அசன் அடுத்த செலாளர் யார் என்பது பற்றிய ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தற்போதுவரை வெளியாகும் தகவல்களில் பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஐசிசி-யின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி வட்டாரங்கள் கூறும் போது, “அவர் எப்படி தேர்வு செய்யப்படுவார் என்பதைவிட, எப்போது பதவியேற்பார் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வரும் பிசிசிஐ செயலாளர் பதவி அடுத்த ஆண்டு வரை தொடர இருக்கிறார். தற்போது ஐசிசி தலைவராக உள்ள கிரெக் பார்கிலே அடுத்த இரு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு பெறும் பட்சத்தில், அவர் முன்கூட்டியே பதவியில் இருந்து விலகவும் முடியாது.”
“ஒருவேலை தற்போது பதவி வகிக்கும் பார்கிலேவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என மாற்றப்பட்டால், ,அடுத்த ஆண்டு முதல் ஜெய் ஷா ஐசிசி செயலாளராக பதவியேற்கும் வாப்புகள் உருவாகும்,” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.