இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய ராணா கேன்டர்பரியில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கினார். எனினும், இந்தப் போட்டியில் ரானா எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசவில்லை.
இதைத் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஹர்ஷித் ராணா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 4-ம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ராணா இந்திய அணியுடன் பிர்மிங்ஹாம் பயணிக்கவில்லை என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் வீசிய ஆஃப் கட்டர் பந்துகள் அந்த அணியை திணறடித்தன.
“ஹர்ஷித் ராணா, நான் தேர்வுக்குழு தலைவருடன் ஆலோசனை செய்ய இருக்கிறோம். எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. உடலில் சிறு பிரச்சினை காரணமாகத் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். நான் இதுகுறித்து ஆலோசனை செய்த பிறகு முடிவு எடுப்பேன்,” என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறுகிறார். இதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் அல்லது பிரசித் கிருஷ்ணா என இருவரில் ஒருவர் அணியில் இருந்து விலக வேண்டியிருக்கும். பிர்மிங்ஹாம் களத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதே குல்தீப் அணியில் இடம்பிடிக்க முக்கிய காரணம் ஆகும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார் இதுபற்றி கூறும் போது, “குல்தீப் அங்கு இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அங்கு நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் செல்வதில் அர்த்தமில்லை. ஷர்துல் அல்லது பிரசித் என இருவரில் ஒருவருக்கு மாற்றாக குல்தீப் இடம்பெறலாம்,” என்றார்.