Connect with us

Cricket

கோலிக்கு சப்போர்ட் பண்ணல.. தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

Published

on

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை மிக மோசமாக தோற்றது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி பேட்டிங் மிக மோசமான ஒன்றாக இருந்தது என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் குற்றம்சாட்டினர். இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் விராட் கோலி 24, 14 மற்றும் 20 என மொத்தத்தில் 54 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இந்திய பேட்டர்கள் ஏமாற்றம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்த சீரிசில் நாம் இதை மட்டும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா அல்லது யாராக இருந்தாலும், 8 முதல் 30 வரையிலான ஓவர்களில் ஓரளவுக்கு புதிய பந்தில் விளையாடுவது அங்கு கடினமாகவே தெரிந்தது.

இதில் கவலை கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. பெரும்பாலான பிட்ச்கள் இதுபோன்று வேலை செய்யாது, ஆனால் இது போன்ற பிட்ச்களில் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடுவது கடினம் தான். இங்கு விராட் கோலிக்கு சப்போர்ட் செய்யவில்லை. ஆனால் இங்கு சுழற்பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவது மிகவும் கடினம். நல்ல விக்கெட்டுகள், சிறிய பவுண்டரிகளில் அவர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர், என்று தெரிவித்தார்.

google news