Connect with us

Cricket

ஓங்கி அடித்த ஷாட் – பவுலர் தலையை பதம் பார்த்த பந்து, முகம் முழுக்க இரத்தம்.. என்ன ஆச்சு?

Published

on

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் சீட்டிள் ஆர்காஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் இடையிலான போட்டி சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த போட்டியில் சிட்டிள் ஆர்கஸ் அணி பேட் செய்த போது, அரங்கேறிய அம்சபாவிதம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சான் பிரான்சிஸ்கோ அணியின் பந்துவீச்சாளர் லி ரௌக்ஸ் போட்டியில் தனது இரண்டாவது ஓவரை வீசினார். அதை எதிர்கொண்ட சீட்டிள் ஆர்கஸ் பேட்டர் ரிக்கிள்டன், ஸ்டிரெயிட்டில் ஓங்கி ஷாட் அடிக்க முற்பட்டார். அவர் அடிக்க நினைத்த ஷாட் முழுமை பெறாததால், பந்து அதிவேகமாக வந்து லி ரௌக்ஸ் தலையை பதம் பார்த்தது. இதில் பலத்த காயமுற்ற லி ரௌக்ஸ் முகம் முழுக்க இரத்தம் ஓழுகியது.

ஓங்கி அடிக்கப்பட்ட பந்து நேரடியாக தலையை தாக்கியதால், நிலைகுலைந்த லி ரௌக்ஸ் சட்டென தலையை பிடித்துக் கொண்டே கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவ குழு களத்திற்குள் விரைந்து வந்தது. அங்கு வைத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. இதனால் தலையில் இரத்தம் வழிவது நின்றது. பிறகு, களத்தில் இருந்து நடந்தபடி காயத்துடன் வெளியேறினார் லி ரௌக்ஸ்.

போட்டியின் போது, பந்துவீச்சாளர் தலையில் இருந்து இரத்தம் வடிந்த சம்பவம் அங்கு பெரும் பதற்ற சூழலை உருவாக்கியது. அதன்பிறகு சிறிது நேரம் கழித்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய சீட்டிள் ஆர்கஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

google news