Connect with us

Cricket

ரோகித் கொடுத்த அட்வைஸ்.. இன்றும் மறக்காத பவுலர்..!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் தோற்றது. 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழப்பது இதுவே முதல் முறை ஆகும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கினர்.

இதனால் இந்த தொடரில் இருவர்மீதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஓரளவுக்கு ரன் குவிப்பில் ஈட, விராட் கோலி தொடரில் மொத்தமாகவே 54 ரன்களையே சேர்த்தார். தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியால் 240 ரன்களை கூட குவிக்க முடியாத நிலை உருவானது. மறுபக்கம் ரோகித் சர்மா தொடரில் அதிகபட்சமாக 157 ரன்களை குவித்தார்.

இந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடர்களின் போது ரோகித் சர்மாவுடனான உரையாடல்கள் பற்றி பேசினார். அப்போது அன்டர் 19 போட்டிகளில் விளையாடிய காலக்கட்டத்தில் ரோகித் சர்மா கொடுத்த அட்வைஸ் பற்றி பிரக்யான் ஓஜா பேசியுள்ளார். அப்போது, இந்திய அணியில் நீடிக்க ஒருவர் போட்டியை வெல்லும் திறன் கொண்டிருப்பது அவசியம் என்று ரோகித் கூறியதாக தெரிவித்தார்.

“ரோகித் சர்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்த சிறந்த அறிவுரை, நாங்கள் அன்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி வந்த போது தான் கிடைத்தது. நாம் அன்டர் 19 அளவுக்கு வந்துள்ளதால், அனைவரும் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமெனில் போட்டியை வெல்லும் திறமை இருப்பது அவசியம் ஆகும்,” என்று ஓஜா தெரிவித்தார்.

இந்திய அணிக்காக பிரக்யான் ஓஜா 24 டெஸ்ட் போட்டிகள், 18 ஒருநாள் போட்டிகள், ஆறு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் 113 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் ஏழுமுறை 5-விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடைசியாக இவர் 2013 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

google news