Connect with us

Cricket

மன்கட் விவகாரம்.. அஸ்வின் Reply இதுதான்

Published

on

தமிழ்நாடு கிரிக்கெட் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரில் இந்திய அணியின் ரவிசந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரவிசந்திரன் அஸ்வினை மன்கட் செய்ய முயன்ற நெல்லை ராயல் கிங்ஸ் வீரரால் சர்ச்சை கிளம்பியது.

இந்த போட்டியின் முதல் ஓவரில் டிராகன்ஸ் அணிக்காக களமிறங்கிய அஸ்வின், நான் ஸ்டிரைக்கர் பகுதியில் ரன் ஓட தயாராக இருந்தார். அப்போது அஸ்வீன் பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறுவதாக பந்துவீச்சாளர் நினைத்தார். அதன்படி குறிப்பிட்ட பந்தை வீச ஆயத்தமானவர், திடீரென நின்றுகொண்டு அம்பயரிடம் ஏதோ பேசினார்.

சம்பவத்தின் போது அஸ்வின் ரன் ஓட ஆயத்தமான போதிலும், அவரது பேட் கிரீஸ் கோடின் மீதுதான் இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் பல வீரர்களை மன்கட் செய்து விக்கெட் எடுத்தவர் ரவிசந்திரன் அஸ்வின். இந்த நிலையில், அவரையே மன்கட் செய்ய முயன்ற வீரரால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் போது அஸ்வினின் பேட் கிரீஸில் இருந்த போதிலும், களத்தில் இருந்தவர்கள் பலரும் அஸ்வின் கிரிக்கெட் விதிகள் பற்றி நிறைய பேசுகிறார், ஆனால் அவர் அதனை பின்பற்றியதாக தெரியவில்லை என்ற வாக்கில் கமென்ட் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், டிஎன்பிஎல் போட்டியில் மன்கட்-க்கு ஆளானது பற்றி ரவிசந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது, “பந்துவீச்சாளர் பந்தை விடுவிக்க முயற்சிக்கும் வரை நான் ஸ்டிரைக்கர் ஓடுவதற்கு ஆயத்தமாகலாம் என்ற விதி உள்ளது,” என தெரிவித்தார். இது தொடர்பாக எக்ஸ் பயனர் ஒருவர், “பந்துவீசப்படும் போது அவர் கிரீஸில் இருந்தார், விக்கெட் கேட்டிருந்தாலும், அதற்கு அவுட் கொடுக்க முடியாது. கமென்ட் செய்பவர்கள் ஏன் இதனை குறிப்பிடவில்லை,” என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின், “ஏனெனில் அவர்களுக்கு விதிமுறை தெரியாது,” என பதில் அளித்தார். கூடவே சிரிக்கும் எமோஜி ஒன்றை இணைத்திருந்தார்.

google news