Connect with us

Cricket

உலகக் கோப்பையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன்.. Hats Off ஹர்திக் – ரோகித் சர்மா

Published

on

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய ரோகித் சர்மா, வீரர்களுடன் இணைந்து நாட்டிற்காக விளையாடினோம். இந்த கோப்பை ஒட்டுமொத்த நாட்டிற்கானது. 11 ஆண்டுகள் இதற்காக காத்திருந்த எங்களது ரசிகர்களுக்கு இதனை அர்ப்பணிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மும்பை எப்போதும் ஏமாற்றாது. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அணியின் சார்பாக நாங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உள்ளது.

ஹர்திக் எங்களுக்காக கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரை அப்படி வீசியதற்கு அவருக்கு ஹாட்ஸ் ஆஃப். எத்தனை ரன்கள் வேண்டும் என்பதை கடந்து, அந்த ஓவரை வீசுவதில் அதிக அழுத்தம் இருக்கும். ஆனால் அவருக்கு ஹாட்ஸ் ஆஃப், என்று தெரிவித்தார்.

ரோகித் சர்மா இவ்வாறு கூறியதும், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஹர்திக் பெயரை உரக்க கூறி ஆர்ப்பரித்தனர். இதை கண்ட ஹர்திக் பாண்டியா எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து அமர்ந்தார்.

முன்னதாக, பார்படோஸில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்திய அணி வீரர்கள் நேற்று காலை தான் டெல்லி வந்தனர். டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதைத் தொடர்ந்து டெல்லியில் மும்பை வந்த வீரர்கள் மெரைன் டிரைவில் திறந்தவெளி வாகனத்தில் நகர்வலம் வந்தனர்.

google news