Cricket
ஹிட்மேன் மிரட்டல்.. ஒரே இன்னிங்ஸ்.. இத்தனை சாதனைகளா?
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர் விராட் கோலி இந்த போட்டியிலும் சொதப்ப, கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு தேவைப்பட்ட அதிரடி துவக்கத்தை ரோகித் சர்மா தனது பேட் மூலம் உறுதிப்படுத்தினார். இவர் இந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரை எதிர்த்து 8 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம் 19 பந்துகளில் அரைசதம், 41 பந்துகளில் 92 ரன்களை குவித்தார்.
ஆட்டமிழந்த போது ரோகித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் மட்டும் 224.39 ஆக இருந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த வகையில், இன்றைய இன்னிங்சில் ரோகித்-இன் அதிரடி பேட்டிங் அவருக்கு இரண்டு புதிய உலக சாதனைகளை பெற்று கொடுத்தது.
முதலில் சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இவை தவிர ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். இது தொடர்பான பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
- சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் ரோகித் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 132 சிக்சர்கள்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார்.
- டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவுக்காக அதிக ரின்களை விளாசிய வீரர்கள் பட்டியிலில் ரோகித் சர்மா இரண்டாவது இடம். இன்றைய போட்டியில் விளாசிய 92 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- அணியின் கேப்டனாக டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அடித்த 92 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.