Cricket
லண்டன்: Cool-ஆ சாலையை கடந்த கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கிய விராட் கோலி, தற்போது லண்டன் சென்றுள்ளார். நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவருக்கு சாதகமாக அமையவில்லை. தொடரின் மூன்று போட்டிகளில் வெறும் 58 ரன்களை எடுத்த விராட் கோலியின் சராசரி 19.33 ஆகும்.
இலங்கை தொடரைத் தொடர்ந்து லண்டன் சென்றுள்ள விராட் கோலி, சாலையை கடக்க நின்றுக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆகி வருகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடித்து நாடு திரும்பிய விராட் கோலி, உடனடியாக லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், இலங்கை தொடரை முடிந்த பிறகு மீண்டும் லண்டன் சென்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ஓய்வில் உள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடையில், இந்தியா வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“பும்ராவை பொருத்தவரை அவருக்கு, அவரின் உடல்நிலை சரியாக தெரிந்திருந்து, வங்காளதேசம் அணிக்கு எதிராக விளையாட விரும்பினால் அவர் நிச்சயம் விளையாடலாம். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 120 சதவீதம் ஃபிட்டாக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு நிச்சயம் தேவை என்று தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் விரும்புகிறது,” என பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.