வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ரிசர்வ் வங்கி

வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு நற்செய்தி வெளியாகி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வங்கிக் கடன் பெறுவோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருக்கும். இந்த அறிவிப்பின் படி தனிநபர்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காக வாங்கும் கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கு எவ்வித முன்பணக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இதற்கான உத்தரவு ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது.

ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள புதிய உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி (ஜனவரி 1, 2026) முதல் அமலுக்கு வரும். இந்த தேதியோ அல்லது அதற்கு பிறகு புதிதாக வாங்கப்படும் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் அனைத்து கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறு, குறு நிறுவனங்கள் எளிதான நிதி கிடைப்பது மிக முக்கியமானது என கூறப்பட்டுள்ளது.

தனிநபர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்துவித கடன்களுக்கும் வணிக வங்கி அடுக்கு 4 முதன்மை கூட்டுறவு வங்கி, NBFS-UL மற்றும் அகில இந்திய நிதி நிறுவனம் எந்த முன்பணம் செலுத்தும் கட்டணங்களையும் விதிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக வங்கிகள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றுகின்றன என்பதும், வணிகம் தவிர தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு ஒழுங்குமுறை நிறுவனம் முன்பணம் செலுத்தும் கட்டணங்களை விதிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிககள், மாநில கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்று்ம NBFCMLகள் ரூ. 50 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட தொகை மற்றும் வரம்பை கொண்ட கடன்களுக்கு எந்த முன்பணம் செலுத்தும் கட்டணங்களையும் விதிக்காது. இதேபோல் கடனை முன்கூட்டியே செலுத்த பயன்படுத்தப்படும் நிதியின் மூலத்தை பொருட்படுத்தாமல் பகுதியளவு அல்லது முழுமையாக குறைந்தபட்ச லாக்-இன் காலம் இன்றி இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

Leave a Comment