Connect with us

health tips

ஒல்லியாக இருக்குறீங்களா? கவலையே வேண்டாம்…. இதைக் கட்டாயம் சாப்பிடுங்க…!

Published

on

கன்னம் எல்லாம் ஒட்டிப் போய் ஒல்லியாக இருப்பவர்களுக்கு நாம கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைப்பாங்க. பார்க்கவும் ஸ்மார்ட் லுக்கா இருப்பாங்க.

இதற்காக இவங்க எத்தனையோ சத்து டானிக்குகள் எல்லாம் சிறுவயதில் வாங்கி சாப்பிட்டு இருப்பாங்க. ஆனால் அவர்களுக்கு கவலை தீர்ந்தபாடில்லை. இவர்களுக்கு இயற்கை அளித்த ஒரு வரப்பிரசாதம் தான் இந்தக் காய்கறி. என்னன்னு பார்ப்போமா…

வயிறு, குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஏற்ற காய்கறி இது. தோலுடன் சேர்த்து சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த கிழங்கு. அதுதான் உருளைக்கிழங்கு.

சைவம், அசைவம் என எந்த சமையல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை நல்லா வேக வைத்து மசாலா போட்டு வதக்கி சாப்பிடும்போது அதன் ருசியே தனி தான். வழக்கமாக சாப்பிடுவதைக் காட்டிலும் அதிகமாகவே சாப்பிடுவோம்.

potato masala

பெரும்பாலானவர்கள் ஃபேஷனாக உருளைக்கிழங்கை சிப்ஸ் செய்தும், வறுத்தும் சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவதைத் தவிர்த்து வேகவைத்தே சாப்பிட வேண்டும்.

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. அதனால் இதய நோயாளிகளும், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களும் தாராளமாக சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது.

Potato

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் அதில் உள்ள மாவுச்சத்தானது அடிவயிறு, இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதைத் தடுக்கிறது. அதே போல் அவற்றில் நச்சுநீர் தங்குவதையும் முன்பே தடுத்து உடலைப் பாதுகாத்து விடுகிறது.

உருளையில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், சிறிது புரதச்சத்தும் உள்ளது. ஒல்லியாக இருப்பவர்கள் உருளையை சாப்பிட்டால் எடை கொஞ்சம் கூடி சதைபிடிப்புடன் இருக்கலாம்.

உருளைக்கிழங்கை அப்படியே மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி அதை எடுத்து தேனுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் பளபளப்பாகும். சருமத்தில் காணப்படும் புள்ளிகளையும் நீக்குகிறது.

google news