health tips
எப்போதும் ‘உம்’மென்று இருக்கிறீர்களா? இதோ சந்தோஷத்துக்கான வழிகள்..!
ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. சிரித்த முகம் தான் அழகு.
சிலர் எப்போதும் எதையோ பறி கொடுத்த மாதிரி முகத்தை உம்மென்று வைத்து இருப்பார்கள். முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் ஓட வேண்டுமா?
அதை எப்போதும் சுரக்கச் செய்வது இந்த ஹார்மோன்கள் தான். டோப்மைன், ஆக்சிடோசின், செரோட்டினின், எண்டோர்பின்கள் ஆகிய ஹார்மோன் தான். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஹார்மோன்களைச் சுரக்கச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்.
எல்லாம் நமக்கு எளிதான விஷயம் தான். ஆனால் தினமும் செய்வதில் தான் விஷயம் இருக்கிறது. அது தான் நம் உடலுக்கும், மனதுக்கும் நலம் பயக்கும்.
தினமும் இது நமக்கான நாள்… இன்றைய பொழுதை இனிதே துவங்க வேண்டும். இந்த நாளில் நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும் இறைவனுக்கு நன்றியை செலுத்துங்கள்.
அப்போது உங்கள் உடலில் டோப்மைன் அளவு அதிகரிக்கும். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடலில் எண்டோஃபிலன்களை சுரக்கச் செய்யும்.
தினசரி காலை நேர சூரிய ஒளியில் சிறிது நேரமாவது இருங்க. அது உங்கள் உடலில் செரோட்டினை சுரக்கச் செய்யும். தினமும் 15 நிமிடங்களாவது வெயிலில் நில்லுங்க.
தினசரி ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அல்லது தியானம் செய்யுங்க. அது உங்கள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை அதிகமாhக சுரக்கச் செய்யும்.
சத்தமாக மனம் விட்டு சிரிங்க. அது டோப்மைன், எண்டோர்பின்களைச் சுரக்க வைக்கும். உங்கள் குழந்தைகளைக் கொஞ்சுங்க. வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுங்க. அது உங்கள் உடலில ;ஆக்சிடோசின் என்ற காதல் ஹார்மோனை சுரக்கச் செய்யும்.
இரவுப் பொழுதில் நன்றாக தூங்குங்க. அதாவது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். அது உங்களுக்கு செரட்டோனின், டோப்மைன் ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். இதனால் மனம் ஆரோக்கியமாகும். இதனால் உடலும் நலமாக இருக்கும்.