health tips
பீர் நல்லது தான்… ஆனா நீங்க இப்படித் தான் குடிக்க வேண்டும்… மறந்துடாதீங்க… இல்லேன்னா ஆபத்து…!
இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு விசேஷம்னா மது அருந்துவது பேஷன் ஆகிவிட்டது. அதிலும் பீர் குடிப்பது டீன் ஏஜ் வயதினர் மத்தியில் ரொம்பவே பிரபலமாகிவிட்டது. இது உடல் நலத்திற்கு நல்லது தான் என்று ஆரம்பித்து கடைசியில் மட்டையாகி விடுகின்றனர்.
குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது. குடி குடியைக் கெடுக்கும் என்று தான் விளம்பரப்படுத்துகின்றனர்.
ஆனால் எதுவுமே அளவோடு இருந்தால் அது மருந்து. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அதுவே நம் அழிவுக்கு வழிவகுத்து விடும். இதை உணர்ந்து கொண்டு வாழ்ந்தால் உற்சாகப்பானம் உங்களுக்கு தேவையான தருணங்களில் உற்சாகத்தை அளிக்கும். இல்லையேல் அது நரக வாழ்விற்கு வழிவகுத்து விடும்.
அந்தவகையில் பீர் என்ற ஒரு பானம் இளம் பெண்கள் மத்தியிலும் பாப்புலராகி விட்டது. இதில் ஏதாவது நன்மைகள் இருக்கிறதா என்று பார்த்தால் இருக்கத் தான் செய்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாமா…
புற்றுநோய் வரும் ஆபத்தைத் தடுப்பதில் பீர் முக்கியப்பங்கு வகிக்கிறது. நீரிழிவு கட்டுப்பாடு, சிறுநீரகக் கற்களைத் தடுப்பது, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்தக் கட்டிகளைக் குறைத்தல் என உடலின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
அதுமட்டுமல்லாமல், செரிமானப் பிரச்சனையைத் தடுக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
பீரில் ஹீமோகுளோபினை பராமரிக்கவும், ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கவும் உதவும் வைட்டமின்கள் அதிகம். இது இதயத்தைப் பாதுகாக்கிறது. பல்வேறு இருதய நோய்கள் வருவதைத் தடுக்கிறது.
பீர் என்பது காய்ச்சப்பட்ட மால்ட் பார்லி. கோதுமை அல்லது சோளத்தைக் கொண்டும் பீர் தயாரிப்பார்கள். இதைக் காய்ச்சும்போது புளித்த ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையின் இறுதிப்பொருள்.
பீர் குடிப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராது. சர்க்கரை நோயும் வராது. செரிமானப்பிரச்சனையை சீர் செய்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஈஸ்ட் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
மெக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், குரோமியம் மற்றும் வைட்டமின் பி ஆகிய ஊட்டச்சத்துகள் பீரில் உள்ளன. அதனால் அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழுங்கள்.