Connect with us

health tips

இதை மட்டும் செஞ்சா போதும். ஒட்டுமொத்த நோய்களும் குணமாகும்..!

Published

on

Head Massage

‘எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அப்படித் தான் நம் உடலில் தலை மிகவும் முக்கியமான உறுப்பு. இங்கு ஒரு சின்ன வியாதி வந்தாலும் உடலே சோர்வடைந்து விடும். நம் உடலின் ஐம்புலன்களும் அங்கு தான் உள்ளது.

அந்த வகையில் தலையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் அதனால் தான் இன்றும் கூட காமெடியாக மண்ட பத்திரம்னு சொல்வாங்க. தலையை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பார்க்கலாமா…

நம் தலையில் 25 வர்மப் புள்ளிகள் இருக்கிறதாம். அது எங்கெங்கே இருக்கு என்று நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டாம். உங்கள் கைவிரல்களால் அவ்வப்போது தலையைச் சுற்றிலும் மசாஜ் செய்து கொண்டு இருந்தால் போதும். அது அந்தந்த புள்ளிகளைப் போய் கண்டிப்பாக டச் பண்ணி விடும். இதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்யலாம்.

ஒரு எளிமையான பயிற்சி தான். இதனால் உங்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்களைப் பாருங்க.
தலையில் உள்ள 25 வர்மபுள்ளிகளையும் இயக்குவதால் பின்வரும் பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன.

மூளை சுறுசுறுப்பாகிறது. நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டச் செய்கிறது. தலைவலி, ஒற்றைத்தலைவலி, பின் மண்டை தலைவலி நீங்கும். மன அழுத்தம், தூக்கமின்மை, மூக்கடைப்பு, கண்நோய்கள் குணமாகும்.

Eyes

Eyes

ஆண்மை குறைவு, கருப்பை நோய்கள் நீங்கும். குறட்டை, பீனிசம் போகும். கழுத்து எலும்புகளுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். தலைநடுக்கத்தைப் போக்கி விடும். மனநோய் நீங்கும். பிட்யூட்டரி செயல்பாடு குறைகள் ஆகியவற்றை நீக்கும். தலை சுற்றுதல் நிற்கும்.

கண்பார்வைத் திறன் அதிகரிக்கும். கண் நரம்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். கண்பார்வையை ஒழுங்கு செய்யும். கண் அழுத்த நோய் குணமாகும். நாக்குக்கு அதன் சுவையை உணர்த்தும். மூக்குக்கு அதன் மணத்தை உணரச் செய்யும்.

அதே போல வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும். உடல் சோர்வைப் போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தலை சார்ந்த மயக்க உணர்வைப் போக்கும். முகவாதம், பக்கவாதம் நீங்கும். தொடு உணர்வை உண்டாக்கும். மூளையின் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

திக்குவாய் குணமாகும். உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டும். தொண்டைக்கட்டு, இருமல் ஆகியவை குணமாகும்.

google news