health tips
மூளையை சுறுசுறுப்பாக்கி, இதயத்தைப் பலமாக்கும் மாதுளம்பழம்
மாதுளம்பழம் பார்ப்பதற்கே சும்மா தகதகன்னு மின்னும். பழத்தோட தோலைப் பிய்த்து எடுத்ததும் அதில் வெளிப்படும் செந்நிற முத்துக்கள் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.
இனிப்புச்சுவையுடன் தாகத்தைத் தணிக்கும். இந்தப் பழத்தைச் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
இனி தலைமுடி சரியாக வளராமல் இருப்பவர்கள் கவலைப்படவே வேண்டாம். மாதுளையைத் தினமும் சாப்பிட்டால் தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும்.
தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். அதுமட்டுமா… இதில் உள்ள வைட்டமின் மற்றும் தனிமங்கள் தலைமுடியைப் பளபளப்பாகவும் மாற்றி விடுகிறது.
இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தையோட மூளை வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது.
அதே மாதிரி வயிற்றில் சேர்ந்து கிடக்கும் தேவையற்றக் கொழுப்புகளை நீக்குது. ஜீரணக்கோளாறை சரிசெய்து உடல் எடையைக் குறைக்குது.
நீரிழிவு நோய் வராமல் தடுக்குது. மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து பலத்தைத் தருகிறது.
இது ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து விடுகிறது. தினமும் 100 மிலி மாதுளை சாறு சாப்பிட்டீங்கன்னா உங்களோட ரத்தநாளங்கள் தளர்வடையுது.
இதனால அதிகளவு ஆக்சிஜனையும் ரத்தத்தோட சேர்த்து இதயத்துக்குக் கொண்டு போகுது. இது பலமான இதயத்தைத் தருகிறது.