Connect with us

india

மேடையில் கோபம் காட்டிய அமித்ஷா… தயங்கியபடி பேசிய தமிழிசை… வைரலாகும் வாக்குவாதம்!

Published

on

தமிழ்நாடு பாஜகவில் உள்கட்சிப் பூசல் வெடித்திருக்கும் நிலையில், பொது மேடையில் வைத்தே தமிழிசை சௌந்தரராஜனிடம் அமித் ஷா கடுமையாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், `தோல்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவுகளே காரணம். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20 இடங்களையாவது வென்றிருக்கலாம்’ என்று வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.

மேலும், பாஜக ஐடி விங்கில் இருக்கும் சிலர் சொந்தத் தலைவர்களேயே விமர்சிப்பதாகவும், முன்னாள் தலைவர் என்கிற முறையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் கடுமை காட்டியிருந்தார். இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும், அண்ணாமலைக்கு எதிராக பாஜகவின் சில தலைவர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த மோதல் போக்கு குறித்து பாஜக தலைமை நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டிருந்தது.

இந்தநிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திர பாபு நாயுடு ஆந்திர முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்த அமித் ஷாவிடம் தமிழிசை பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தமிழிசையிடம் அமித் ஷா கடுமை காட்டுகிறார். தமிழிசையிடம் அவர் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். ஆனால், அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக கண்டிப்பது போன்ற தொனியில் அமித் ஷா பேசுகிறார்.

தமிழ்நாடு பாஜக உள்கட்சி மோதல் பற்றிதான் அமித் ஷா, தமிழிசையைக் கண்டித்திருக்கிறார் என்கிறார்கள். தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும்போது அவரை மீறி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதற்காக தமிழிசையை அவர் கண்டித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், அமித் ஷா அவரைக் கண்டித்திருக்கிறார் என்பதால் அண்ணாமலைக்கு ஆதரவாகவே பாஜக மேலிடம் இருக்கிறது என்பது தெரியவருகிறது என்று அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் எடுக்கும் முடிவு பற்றி அடுத்த சில நாட்களில் தெரியும்.

இதையும் படிங்க: பிரதமர் திட்டத்தின் கீழ் 3 கோடி பேருக்கு வீடு!.. விண்ணப்பிப்பது எப்படி?….

google news