india
சர்வதேச யோகா தினம்… இந்தியா முழுவதும் கோலாகல கொண்டாட்டம்….
பழங்கால பயிற்சி முறையான யோகா இன்று உலகம் முழுவதும் வளர்ந்து இருக்கிறது. இதனையடுத்து ஜூன்21ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 27ந் தேதி 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபையில் சர்வதேச யோகா தினத்தினை நரேந்திர மோடி முன்மொழிந்தார். உலகளவில் அமைதி மற்றும் நல்லிணத்தினை வளர்ப்பதற்கு யோகா முக்கிய காரணமாக அமையும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து ஐக்கிய நாடுகள் பொது சபை 69/131 தீர்மானத்தினை ஏற்று, ஜூன் 21ல் சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
இதையடுத்து, முதல் சரவதேச யோகா தினம் ஜூன்21ம் தேதி 2015ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு வருடமும் யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான யோகா தினத்திற்கு “சுய மற்றும் சமூகத்திற்கான யோகா” என்ற தீமில் 10வது வருடத்திற்கான சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பள்ளிகள் முதற்கொண்டு முக்கிய இடத்தில் யோகா தினத்தினை கொண்டாடுகின்றனர். வெள்ளை உடைகள் அணிந்து மூச்சுத்திணறலை சமாளிப்பதற்கான மாஸ்குகளை அணிந்து இந்திய ராணுவப் படையினர், பனியால் நிறைந்து இருந்த வடக்கு எல்லையில் யோகா செய்தனர். கடற்படை வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் யோகா ஈடுபட்டனர்.
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு பணியாளர்கள் இணைந்து 15,000 அடியிலும், வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் துணைத் துறையிலும் யோகா செய்து, கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ படையினர் யோகா செய்தனர். இன்னும் பல இடங்களில் யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.