ஆவின்: கடலூரில் வேலைவாய்ப்பு…மாதம் 15,000 சம்பளம்…விண்ணப்பிக்கவேண்டியது இப்படிதான்.!!

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு ஒப்பந்த முறையில் விற்பனை செயலர்களை தற்காலிகமாக பணியமர்த்திட வேலைவாய்ப்புகான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  ஆவின் கடலூர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பால் விநியோகஸ்தர் (Milk Distributor) பணிக்கு மொத்தமாக 5 காலியிடங்கள் இருப்பதாகவும், கடைசி தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  மற்ற விவரங்களை பார்க்கலாம்

காலியிடங்கள் 

பால் விநியோகஸ்தர் (Milk Distributor) பணிக்கு மொத்தமாக 5 காலியிடங்கள் உள்ளது. எனவே, உங்களுக்கு இந்த பணியில் சேர விருப்பம் உள்ளது என்றால், கீழே வரும் விவரங்களை படித்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு ஆண், பெண் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. (B.B.A) அல்லது எம்.பி.ஏ. (M.B.A) பட்டம் பெற்றிருக்கவேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.

கூடுதல் தகுதி 

சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி வைத்திருக்கவேண்டும் மற்றும் களப்பணியில் முன்னனுபவம் இருக்கவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது 

இந்த பால் விநியோகஸ்தர் (Milk Distributor) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க்க விரும்பும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக முதல் மாதத்தில் 7,500 கொடுக்கப்படும் எனவும், இரண்டாம் மாதத்தில் 15,000 கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம் 

கடலூர், சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் மற்றும் காட்டுமன்னார்கோயில்.

விண்ணப்பிக்கும் முறை 

இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது அதிகாரப்பூர்வ விவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டு அதனை நிரப்பி கொள்ளலாம். நிரப்பி கொண்டு நேரில் சென்றும் கொடுக்கலாம் அல்லது கீழே உள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

ணிக்காக 12.07.2023 அன்று காலை 11.00 மணிக்கு இவ்வொன்றிய தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நேர்க்காணலில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சுயவிவரத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Comment