job news
பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.17,500 உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி..! பெல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஒரு நவரத்னா மற்றும் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை மின்னணுவியல், மல்டி-யூனிட், பல தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமாகும்.
விண்ணப்பதாரர் தகுதி:
அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
- பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்கள்
- எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில் முற்றிலும் தேர்வு செய்யப்படுகிறது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பின் நேர்காணல் நடைபெறும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும்பொழுது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஒரிஜினலில் ஒரு தொகுப்புடன் கொண்டு வர வேண்டும்.
- நேர்காணல் முகவரி:
BEL Recruitment
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.17,500 வரை உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும் தேதி ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகும். அதன் பின் வருவபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அலுவலகத்திற்கு செல்லும் வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CLD ROUTE MAP : Map
