Connect with us

job news

பட்டதாரிகள் கவனத்திற்கு..! அணுசக்தி துறையில் அசத்தலான வேலை…மிஸ் பண்ணிடாதீங்க..!

Published

on

IGCAR Recruitment 2023

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), அணுசக்தி துறையின் கீழ் உள்ள முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும். இயற்பியல், வேதியியல், வாழ்க்கை மற்றும் பொறியியல் அறிவியல் ஆகிய துறைகளில் பணிகளை வழங்குவதன் மூலம் மேம்பட்ட ஆராய்ச்சிக்கு பங்களிக்க இளம், திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் மாணவர்களை IGCAR மேம்படுத்துகிறது.

தற்பொழுது, கல்பாக்கத்தில் உள்ள ஐஜிசிஏஆர் நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (Junior Research Fellow) பணிக்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்: 

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (Junior Research Fellow) பணிக்கு 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் வயது:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை அணுகலாம்.

IGCAR Recruitment

IGCAR Recruitment

விண்ணப்பதாரர் தகுதி:

  • தகுதியான பட்டப்படிப்புகளை முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
  • UGC/AICTE அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • ஐந்து வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. பட்டம் M.Sc./B.S-M.S – இல் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
IGCAR Recruitment

IGCAR Recruitment

விண்ணப்பிக்கும் முறை:

  • ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு விண்ணப்பிப்பவர் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.igcar.gov.in/-க்கு செல்ல வேண்டும்.
  • பின்  படிவத்தை நிரப்பவும்.
  • அனைத்து விவரங்களும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். அடையாளச் சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம், ரெஸ்யூம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும். பின் உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • தேவையென்றால் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தவும்.

தேர்வு முறை:

இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

IGCAR Recruitment

IGCAR Recruitment

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.21,000 முதல் ரூ.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பதாரர் பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூன் 16 ஆகும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ http://www.igcar.gov.in/ இணையதளம் மற்றும் Notification  அறிவிப்பை அணுகலாம்.

IGCAR Recruitment

IGCAR Recruitment

google news