Connect with us

job news

BDL Recruitment 2023: மாதம் 30,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! வெளியான அசத்தல் அறிவிப்பு..!

Published

on

BDL Recruitment 2023

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், திட்டப் பொறியாளர் (Project Engineer) மற்றும் திட்ட அலுவலர் (Project Officer) பணிகளுக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், 1970ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு பொதுத்துறை நிறுவனமாக இணைக்கப்பட்டது.

இந்நிறுவனம் இந்திய ஆயுதப் படைகளுக்கான ஏவுகணை அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களைத் தயாரிக்கிறது. மேலும், பிடிஎல் ஏவுகணை தயாரிப்பாளராக இருந்து ஆயுத அமைப்பு ஒருங்கிணைப்பாளராக பட்டம் பெற்றுள்ளது மற்றும் இந்திய ஆயுதப்படைகளுக்கு முழுமையான தீர்வு வழங்குபவராக உருவெடுத்துள்ளது.

தற்பொழுது, இந்த பணியில் சேர ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துவிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு:

திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர் CA / ICWA/ MBA / MSW /PG Diploma படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திட்டப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் BE/ B.Tech/ B.Sc/ ME/ M.Tech, M.Sc படிப்பில் முதல் வகுப்பில் (First Class) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BDL Job 2023

திட்டப் பொறியாளர் / திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 28 ஆகும். விண்ணப்பதாரர்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://bdl-india.in/sites/default/files/2023-05/Final%20PE-PO%20Advt.No.2023-2.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

BDL Job 2023

விண்ணப்பக்கட்டணம்:

மத்திய அரசின் கீழ் வரும் இந்த பணிகளில் காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திட்டப் பொறியாளர் / திட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் யுஆர்/ஓபிசி(என்சிஎல்)/ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பேமெண்ட் முறையில் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இந்த பணியில் சேர ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய தேதி மே 24 அன்று தொடங்கி,  ஜூன் 23ம் தேதி வரை உள்ளது. நேர்காணலுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி ஜூலை 5 ஆகும். நேர்காணலுக்கான தேதி ஜூலை 2வது வாரம் முதல் தொடங்கவுள்ளது.

BDL Job 2023

எப்படி விண்ணப்பிப்பது:

இந்த பணியில் சேர தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் அறிவிப்பை படித்து தெரிந்து கொண்டு அதன்பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியுடையவர்கள் தங்களது ஆவணங்களை https://bdl-india.in என்ற இணையதளத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், (50 KB, JPG / JEPG வடிவம் மட்டும்) மற்றும் கையொப்பத்துடன் கட்டாய ஆவணங்களை (20 KB, JPG / JEPG வடிவம் மட்டும்) சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பள விவரம்:

திட்டப் பொறியாளர்கள் / திட்ட அலுவலர்களுக்கான மாதத்திற்கு ரூ.30,000 முதல் ரூ.34,000 வரை உள்ளது. மேலும் இந்த ஊதியத்துடன், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம், உடைக்கான கொடுப்பனவு, தையல் கட்டணம், பாதணிகளுக்கான கொடுப்பனவு போன்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10,000/- வழங்கப்படும். இந்த தொகை இரண்டு தவணைகளில் செலுத்தப்படும், அதாவது, சேர்ந்த பிறகு முதல் மாத சம்பளத்துடன் இணைந்து முதல் தவணையும் , சேர்ந்த தேதியிலிருந்து 11 மாதங்கள் முடிந்த பிறகு இரண்டாவது தவணை செலுத்தப்படும்.

google news