எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..! மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 சம்பளத்தில் வேலை..!

0
65
Madurai Kamaraj University
Madurai Kamaraj University

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும் உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistant/Project Fellow) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரர் வயது:

திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவலுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்கவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

மதுரை காமராசர் பல்கலைக்கழக பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி/ மைக்ரோபயாலஜி மற்றும் அது சார்ந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விரிவான சுய சான்றளிக்கப்பட்ட கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களுடன் [email protected] அல்லது [email protected] [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை மற்றும் சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 30ம் தேதி எழுத்துத் தேர்வு/நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.16,000 சம்பளமாக வழங்கப்படும்.

கடைசி தேதி: 

திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தங்களது சான்றிதழ்களை ஜூன் 27ம் தேதிக்குள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு https://mkuniversity.ac.in/new/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது  Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்கவும்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here