Connect with us

job news

டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..ஜிப்மர் நிறுவனத்தில் வேலை..! மிஸ் பண்ணாதீங்க..!

Published

on

JIPMER Recruitment 2023

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research), சுருக்கமாக ஜிப்மர் என்றழைக்கப்படும் இந்நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இந்த ஜிப்மர் நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது ஒப்பந்த அடிப்படையில் தேசிய டெலிமென்டல் ஹெல்த் திட்டதிற்கு காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஜிப்மர் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடம்:

ஜிப்மர் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் (Lab Technician), திட்ட உதவியாளர் (Project Assistant), கள ஆய்வாளர் (Field Investigator) என பல்வேறு பணிகள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 45 வயது உடையவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • 12 வகுப்பு மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்/பிஎஸ்சி எம்எல்டியில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரியில் அறிவியல்/ சம்மந்தப்பட்ட பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து மூன்று வருடம் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • பணி சம்பந்தப்பட்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://jipmer.edu.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாக உள்ளதா என ஒரு முறை பார்க்கவும்.
  • பிறகு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு வரும்பொழுது விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

தேர்வு முறை மற்றும் கடைசி தேதி:

இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவார். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களுடன் ஜூலை 14ம் தேதி தேர்வெழுத வர வேண்டும்.

சம்பள விவரம் :

மேற்கண்ட பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.31,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

JIPMER

JIPMER

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *