Connect with us

job news

டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் வேலை..! 687 காலிப்பணியிடங்கள்..! உடனே விண்ணப்பீங்க.!!

Published

on

DDA Recruitment 2023

டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) காலியாக உள்ள உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, கட்டிடக்கலை உதவியாளர், சட்ட உதவியாளர், நைப் தாசில்தார், ஜூனியர் இன்ஜினியர், சர்வேயர், பட்வாரி மற்றும் இளநிலை செயலக உதவியாளர் ஆகிய பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், டெல்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்: 

உதவி கணக்கு அதிகாரி(51), உதவி பிரிவு அதிகாரி(125), கட்டிடக்கலை உதவியாளர்(9), சட்ட உதவியாளர்(15), நைப் தாசில்தார்(4), ஜூனியர் இன்ஜினியர்(236), சர்வேயர்(13), பட்வாரி(40) மற்றும் இளநிலை செயலக உதவியாளர்(196) என மொத்தம் 687 காலிப்பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரரின் தகுதி:

உதவி கணக்கு அலுவலர்:

பட்டய கணக்காளர் (CA) / நிறுவன செயலர் (CS) / ICWA / நிதிக் கட்டுப்பாட்டில் முதுகலை / MBA (நிதி), அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். எம்.காம் சமமான தகுதியாக கருதப்படாது.

உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ):

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டிடக்கலை உதவியாளர்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம் அல்லது அதற்கு இணையான கட்டிடக்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சட்ட உதவியாளர்:

சட்டத்தில் வழக்கமான பட்டம் (பட்டியில் பதிவு செய்வதற்கும் நீதிமன்றங்களில் ஆஜராவதற்கும் உரிமை உண்டு).
பார் கவுன்சிலில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நைப் தாசில்தார்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை பொறியாளர் (சிவில்):

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வி பெற்றிருக்க வேண்டும்.

சர்வேயர்:

டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதற்கு சமமான நிறுவனத்திலிருந்து சர்வேயில் இரண்டு வருட அனுபவத்துடன் தேசிய வர்த்தகச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பட்வாரி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை செயலக உதவியாளர்:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் கணினியில் தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் 35 wpm அல்லது இந்தியில் 30 wpm இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது:

மேலே  குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே  குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், Online Application என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் நிரப்புவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் Notification அறிவிப்பைப் படிக்கவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் கேட்டகப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பணிக்கு தேவையான தகுதி, அடையாள சான்று, முகவரி விவரங்கள், அடிப்படை விவரங்கள் என அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்.
  • இறுதியாக விண்ணப்பதாரர் பதிவுக் கட்டணம் செலுத்திவிட்டு, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் கட்டணம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், பொது, ஓபிசி (OBC) மற்றும் EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் PwBD பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
 DDA Recruitment 2023
சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது  https://www.dda.gov.in/  என்ற இணையதளத்தை அணுகலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *