job news
வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் பிஎச்.டி. பெல்லொவ் வேலை..! மிஸ் பண்ணிடாதீங்க..!
வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையம் 21 ஆகஸ்ட் 1993 அன்று திருச்சிராப்பள்ளியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICAR) நிறுவப்பட்டது. இது வாழை மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தித்தியை ஆராய்ச்சி அணுகுமுறைகள் மூலம் அதிகரிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.
தற்பொழுது, வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் (National Research Centre for Banana Trichy) யோவர்சிட்டி இன்டர்நேஷனல் ஸ்பான்சர் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிக்கு ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் (National Research Centre for Banana Trichy) காலியாக உள்ள பிஎச்.டி. பெல்லொவ் (Ph.D. Fellow) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 1 பணியிடம் மட்டுமே உள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தகுதி:
பிஎச்.டி. பெல்லொவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர் எம்.எஸ்சி. (அக்ரி.) / எம்.எஸ்சி. அல்லது எம்.டெக். (உயிர் தொழில்நுட்பம் / தாவர நோயியல் / நுண்ணுயிரியல் / தாவரவியல் / வாழ்க்கை அறிவியல்) எம்.எஸ்சி அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது:
இளம் நிபுணர்-II பதவிக்கு விண்ணப்பிப்பவரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 45 ஆகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு Notification என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் nrcb.icar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு கொடுக்கப்பட்டுள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு, அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZE-ல் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை நேர்த்தியாக தட்டச்சு செய்து, கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவம் போன்றவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
- குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் சம்பளம்:
இளம் நிபுணர்-I பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும். இதற்கு தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவலுக்கு Notification அதிகாரபூர்வ அறிவிப்பு அல்லது nrcb.icar.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.