Connect with us

job news

ஒரு மணி நேரத்திற்கு ரூ.440 சம்பளம்..! ‘BHEL’ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

Published

on

bhel

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இந்தியாவின் முதன்மையான பொறியியல் அமைப்பு, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், தொழில், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு போன்ற உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

BHEL, நிறுவனம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவியை நிரப்புவதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்த்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட், காலியாக உள்ள பகுதி நேர மருத்துவ ஆலோசகர்கள் – பொது கடமை மருத்துவ அதிகாரிகள் (PTMC – GDMO) பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
BHEL RECRUITMENT

BHEL RECRUITMENT

விண்ணப்பதாரர் வயது:
பகுதி நேர மருத்துவ ஆலோசகர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் 65 வயது உடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
  • விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பப் படிவத்தை, BHEL இணையதளமான http://careers.bhel.in இலிருந்து பதிவிறக்கம் செய்து, தங்களின் விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
  • அஞ்சல் உரையில் PTMCக்கான விண்ணப்பம் – நிலைக் குறியீடு எண்” (Application for PTMC – Position Code No.) என்று எழுதி அனுப்ப வேண்டும்.
  • முகவரி: SR. MANAGER/HR-EEX, HRM Dept., Ground Floor, Administrative Building, BHEL Corp. R&D Vikas Nagar, Hyderabad, 500093

தேர்வு முறை:

தகுதியான பெண் விண்ணப்பதாரர் 30.06.2023 அன்று காலை 11.30 மணி முதல் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி: 

பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணிக் செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.440 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஜூன்  20ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *