job news
டிகிரி படித்தவர்களா நீங்கள்? உங்களுக்கு வங்கியில் வேலை…!
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் சிங்களில் விண்டோ ஆபரேட்டர் ஏ பிரிவில் கிளார்க் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான மொத்த காலிப்பணியிடங்கள் 11. இதற்கான கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்ட ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளமாக மாதம் ரூ.17 ஆயிரத்து 900 முதல் ரூ.47 ஆயிரத்து 920 வரை தரப்படுகிறது. இதற்கான வயதுத்தகுதி 18 முதல் 28 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணியிடங்கள் நாடு முழுவதும் நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி. மே.19
மேலும் விவரங்களுக்கு: https://www.unionbankofindia.co.in/english/home.aspx