Connect with us

Finance

ஒரே  நாளில் ஓஹோ உயர்வு…தலைவலியாக மாறுகிறதா தங்கம் விலை?..

Published

on

நேற்று தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் காணப்பட்டது. இது ஆபரணப்பிரியர்களின் மனதில் மகிழ்வை ஏற்படுத்தியது. இந்த ஆனந்தம் நீடிக்கும் என நினைக்கப்பட்ட நேரத்தில் இன்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை.
இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இதே நிலை தொடர்ந்து விடுமா என்ற கேள்வியினையும் தங்க நகை பிரியர்களின் சிந்தனையில் வலம் வரத்துவங்கியுள்ளது. வரும் நாட்களில் இதே போல தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தென்பட்டால் அது நகை வாங்க நினைப்பவர்களுக்கு தலை வலியாக மாறிவிடுமோ? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த செப்டம்பர் மாதம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ஒரு கிராமின் விலை ஏழாயிரம் ரூபாயை (ரூ.7,000/-) தாண்டியது. புதிய உயரத்தை எட்டிய தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறிமாறியே அமைந்தும் வந்தது.
ஒரு சில நாட்கள் திடீர் குறைவினை சந்தித்தாலும் ஏழாயிரம் என்ற இலக்கை அடைந்ததில் இருந்து இறங்கிய பாடாக இல்லை. பெரிய அளவிலான மாற்றத்தை விலையில் நேற்று காட்டாதபோதும், இறங்குமுகத்தை நோக்கி நகரத்துவங்கியது தங்கத்தின் விலை.
ஆனால் இன்று ஒரே நாளில் ஓஹோ உயர்வை சந்தித்துள்ளது.
Silver

Silver

ஒரு கிராமின் விலை ஏழாயிரத்து இருபத்தி ஐந்து ரூபாயாக  (ரூ.7,025/-) இருந்து வந்த நிலையில், இன்று கிராமிற்கு எழுபது ரூபாய் உயர்ந்து ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7,095/-) விற்கப்படுகிறது.  ஒரு சவரனுக்கு ஐனூற்றி அறுபது ரூபாய் (ரூ.560/-) உயர்ந்து ஐம்பத்தி ஆராயிரத்து எழனூற்றி அறுபது ரூபாயாக (ரூ.56,760/-) இருக்கிறது.
நேற்று ஒரு சவரன்  ஐம்பத்தி ஆறாயிரத்து இருனூறு ரூபாய்க்கு  (ரூ.56,200/-) விற்கப்பட்டது. இன்றைய இந்த விலை உயர்வு, வார இறுதி நாளான நாளை மாறிவிடாதா என்ற ஏக்கத்தையும் கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே மாற்றம் எதையும் காணாமல் ஒரே நிலையில் இருந்து வந்த  வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்து அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றை விட இன்று கிராமிற்கு இரண்டு ரூபாய் (ரூ.2/-) உயர்ந்து நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாயாக (ரூ.1,02,000/-) உள்ளது. தங்கத்தை போலவே ஏறுமுகத்திற்கு சென்றுள்ள வெள்ளியின் விலையும் குறையாதா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
google news