Connect with us

Cricket

தந்தை வழியில் மகன்..நெட்ஸ்-இல் மாஸ் காட்டிய லசித் மலிங்கா ஜூனியர்..!

Published

on

Malinga-Featured-Img

மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் நெட்ஸ்-இல் துவின் மலிங்கா ஆக்ஷனில் இறங்கினார். இவரது பவுலிங் ஆக்‌ஷன் அவரின் தந்தை லசித் மலிங்காவை போன்றே இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் துவின் மலிங்கா பவுலிங் ஆக்‌ஷன் உலகிற்கு தெரியவந்துள்ளது.

மிகவும் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன் மூலம் அறிமுகமாகி, பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் மிகவும் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார் லசித் மலிங்கா. இவரது மகன் துவின் மலிங்கா பந்து வீசுவதை பார்க்க, லசித் மலிங்காவை போன்றே தெரிகிறது. இது பற்றிய வீடியோவினை மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-இல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Duvin-Malinga

Duvin-Malinga

வீடியோவில், துவின் மலிங் பந்து வீச்சை பார்த்து, லசித் மலிங்கா ஆலோசனை கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதில், “இயற்கையான நடவடிக்கை. அவர் நேராகவும், அதிவேகமாகவும் பந்துவீச வேண்டும். இவர் இதை செய்தால், அவர் திறமையை கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று லசித் மலிங்கா தெரிவித்தார்.

2023 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லசித் மலிங்கா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருந்தார். மேலும் ஆரம்ப காலம் தொடங்கி பல ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரில் அதிக தாக்கம் ஏற்படுத்திய பந்துவீச்சாளராக லசித் மலிங்கா விளங்கினார். சமீபத்தில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாறி இருக்கும் மதீஷா பதிரானாவின் திறமையை வெகுவாக பாராட்டினார். மேலும் பதிரானா தன்னைவிட சிறப்பாக வளர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Mathesa-pathirana

Mathesa-pathirana

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிரானாவின் திறமையை ஐ.பி.எல். தொடரில் அறிமுகப்படுத்தியது. பதிரானா வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரம் ஆவார். களத்தில் இவரது செயல்பாடு உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இளம் பந்துவீச்சாளரான பதிரானாவின் பந்துவீச்சு அடிக்கடி லசித் மலிங்காவுடன் ஒப்பிடப்படுகிறார்.

“இவரை எப்படியாவது என்னைவிட சிறப்பான வீரராக மாற்றிவிட் வேண்டும். அடுத்த டெஸ்ட் பயணத்தில், இவரை அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் இவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இவர் எப்படி விளையாட போகிறார் என்பதை பார்த்து, இவரது எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இவர் 10 முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, இவரது வளர்ச்சிக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும்,” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் லசித் மலிங்கா தெரிவித்தார்.

google news